Adsense

புதிய மென்பொருட்கள் மட்டுமல்ல சில பழைய வெர்சன்
மென்பொருட்களுக்கு இன்னும் முக்கியத்துவம் இருந்து கொண்டு
தான் இருக்கிறது. அந்த வகையில் பழைய வெர்சன் ( Old version)
Software எங்கு தேடினாலும் சில சமயங்களில் கிடைப்பதில்லை.
இந்த பழைய வெர்சன் மென்பொருட்களை எப்படி தரவிரக்கலாம்
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.தினமும் புதிது புதிதாக அப்டேசனுடன் வெளிவந்து கொண்டிருக்கும்
மென்பொருட்களுக்கு மத்தியில் சில சமயங்களில் நமக்கு பழைய
வெர்சன் மென்பொருள்கள் சிறப்பாக இருக்கும் இப்படி நாம் விரும்பும்
பழைய வெர்சன் மென்பொருளை தரவிரக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.oldversion.com

இந்ததளத்திற்கு சென்று அடிக்கடி நாம் பயன்படுத்தும்
மென்பொருட்களின் old version -ஐ தரவிரக்கலாம். தனித்தனியாக
ஒவ்வொரு துறை வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. Communication,
Graphics, Multimedia, Internet ,  File Sharing, Utilities , Security,
Enterprise ,FTP உதாரணமாக Winamp மென்பொருளின் முதல்
வெர்சனான winamp 0.2 version முதல் Winamp 5.24 version வரை
அத்தனையும் இங்கே கிடைக்கிறது இதில் எந்த வெர்சன் வேண்டுமோ
அதை சொடுக்கி எளிதாக தரவிரக்கிக் கொள்ளலாம். புதிய வெர்சன்
(Latest version software) மென்பொருள் சில சமயம் பயன்படுத்துவது
சற்று கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் நபர்களுக்கு
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
பாவம் செய்யாதிருக்க சிறந்த வழி அனைவரின் மீதும்
அன்பு செலுத்துங்கள்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மண் ஆய்வுக்கூடம் தமிழ்நாட்டில் எங்குள்ளது ?
2.பரிணாம வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் யார் ?
3.பெர்முடா முக்கோணம் எந்தக்கடலின் ஒரு பகுதியில் உள்ளது ?
4.கற்பகவிநாயகர் கோவில் கொண்டிருக்கும் ஊர் எது ?
5.ரயில்வே சிக்னலை கண்டுபிடித்தவர் யார் ?
6.பிரெஞ்சு நாட்டு காந்தி எனப்படுபவர் யார் ?
7.சிறந்த செய்தி மற்றும் சாக்குமெண்டரி படங்களுக்காக
அமெரிக்கா வழங்கும் விருது எது ?
8.எர்த் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
9.பவானி சாகர் அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் உள்ளது ?
10.மேகங்களைப் பற்றிய ஆய்வுத்துறை எது ?
பதில்கள்:
1.குடுமியான் மலை, 2.சார்லஸ் டார்வின்,3.அட்லாண்டிக்,
4.பிள்ளையார்பட்டி,5.ஹால்,6.சார்லஸ் டிகாலோ,
7.எம்மி விருது, 8.எமிலி ஜோலா,9.ஈரோடு.10.நேபாலஜி


இன்று நவம்பர் 3 
பெயர் : அவுரங்கசீப் ,
பிறந்ததேதி : நவம்பர் 3 , 1618
அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஒரு
குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர்.
ஷாஜகான் மற்றும் மும்தாஜின் ஐந்தாவது
வாரிசாவார். இவர் ஆலம்கீர் என
அழைக்கப்பட்டார்.இவரது ஆட்சி காலம் கி.பி. 1658-லிருந்து
கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில்

முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு
வரை பரந்து விரிந்திருந்தது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Advertisement

8 comments:

 1. அன்பு நண்பர்களுக்கு,

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  மகிழ்வு எங்கெங்கும் பெருகட்டும்.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 2. @ ♠புதுவை சிவா♠
  நண்பருக்கும் நம் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. தாமஸ் ரூபன்November 4, 2010 at 8:30 PM

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 5. வழமை போல அசத்தல்

  ReplyDelete
 6. @ தாமஸ் ரூபன்
  உங்களுக்கும் நம் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 7. @ அங்கிதா வர்மா
  உங்களுக்கும் நம் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 8. @ Jiyath
  மிக்க நன்றி

  ReplyDelete

 
Top