ஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, November 24, 2010

ஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம்.

பிஸினஸ் கார்டு உருவாக்க வேண்டும் என்றால் யார் துனையும்
இல்லாமல் பல மணி நேரம் செலவு செய்யாமல் சில நிமிடங்களில்
ஆன்லைன் மூலம் பிஸினஸ் கார்டு உருவாக்கலாம் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

முகவரி அட்டை என்று சொல்லக்கூடிய பிஸினஸ் கார்டு எளிமையான
அளவில் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் குறைவான
நேரத்தில் Professional  பிஸினஸ் கார்டு உருவாக்க விரும்புவர்களுக்கும்
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.freepdfcards.com

எளிமையான பிஸினஸ் கார்டு சில நிமிடங்களில் உருவாக்கி கொடுக்க
வேண்டும் என்பது மட்டும் தான் இந்த தளத்தின் இலட்சியம்.இந்த
தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் இருப்பது போல் நம் பெயர் ,
நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி அத்துடன் நம் நிறுவனத்தில்
லோகோ அல்லது நம் புகைப்படம் இதை upload செய்து சில
நிமிடங்களிலே உருவாக்கலாம். preview என்ற பொத்தானை சொடுக்கி
வலது பக்கத்தில் கார்டு எப்படி வரும் என்பதை பார்த்துக்கொள்ளலாம்.
பிஸினஸ் கார்டு உருவாக்கி முடித்ததும் Download என்ற பொத்தானை
சொடுக்கி pdf கோப்பாக நம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.
எளிமையான முறையில் பிஸினஸ் கார்டு உருவாக்க
நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
விஞ்ஞானம் வளர வளர மனிதர்களிடம் அன்பு குறைந்து
ரோபோக்களாக மாறி வருகிறோம்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அமெரிக்கா சுதந்திர பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு எது ?
2.கீதாஞ்சலி என்ற நூலை எழுதியவர் யார் ?
3.முதன் முதலில் எந்த நாட்டில் வங்கி துவக்கப்பட்டது ?
4.வாரணாசி என்பதன் முந்தைய பெயர் என்ன ?
5.வெடி மருந்தை கண்டுபிடித்தவர் யார் ?
6.முகம்மது நபிகள் பிறந்த வருடம் என்ன ?
7.சிறுநீரில் கலந்துள்ள அமிலம் என்ன ?
8.கரையான் அரிக்காத மரம் எது ?
9.இந்தியாவின் தேசிய மிருகம் எது ?
10.பைசா கோபுரம் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது ?
பதில்கள்:
1.1917,2.தாகூர்,3. இங்கிலாந்து,4.காசி,5.ஆல்பர்ட் நோபல்,
6.கி.பி.569,7.யூரிக் அமிலம், 8.தேக்கு, 9.புலி.
10.14 ஆம் நூற்றாண்டில்.


இன்று நவம்பர் 24 
பெயர் : அருந்ததி ராய் ,
பிறந்த தேதி : நவம்பர் 24, 1961
ஓர் இந்திய எழுத்தாளர்.இவரது பல
படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண்
அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர்
பிரச்சனை, அமேரிக்காவின் வெளியுறவு
கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார்.
இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம்
கொண்டு சேர்த்தது என்றால் அது மிகையல்ல.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

1 comment:

Post Top Ad