ஆன்லைன் -ல் செஸ் விளையாடி உங்கள் திறமையை வளர்க்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, November 6, 2010

ஆன்லைன் -ல் செஸ் விளையாடி உங்கள் திறமையை வளர்க்கலாம்.

புத்திக்கூர்மையான விளையாட்டு என்று சொல்லக்கூடிய செஸ்
விளையாட்டை ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும்
விளையாடலம். செஸ் விளையாட்டைப்பற்றி மேலும் பல அறிய
தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.



விளையாட்டுக்கு மொழி முக்கியமல்ல, உடல் தகுதியும் முக்கிமல்ல
அறிவு அதுவும் துல்லியமான அறிவு இது மட்டும் போதும் என்று
சொல்லும் செஸ் விளையாட்டில் தினமும் புதிது புதிதாக ஏதாவது
ஒன்றை விளையாடி கற்றுக்கொண்டிருப்போம். ஆனால் கணினியுடன்
செஸ் விளையாட்டை விளையாடும் போது பல நேரங்களில்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் ஆனால் ஆன்லைன் மூலம்
செஸ்விளையாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் விளையாடலாம்.
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.chess.com

இந்ததளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு பயனாளர் கணக்கை
உருவாக்கிக்கொண்டு நாம் விளையாட தொடங்கலாம். இந்ததளத்தில்
600,000 மேற்பட்ட பயனளார்கள் உள்ளனர். இதில் சராசரியாக
2000 பேர் எப்போதும் ஆன்லைன் -ல் செஸ் விளையாடிக்
கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் நாம் சேர்ந்து செஸ்
விளையாடலம்.  Learn chess  என்பதை சொடுக்கி செஸ்
விளையாட்டைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.மொபைல்
மற்றும் ஐபோன் மூலமும் நாம் இந்தத்தளத்தின் மூலம் செஸ்
விளையாடலாம். செஸ் விளையாடும் நண்பர்களுக்கு
கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
இறைவனுக்காக இருக்கும் விரதம் மனதிலும்
உடலிலும்  நோய் வராமல் தடுக்கும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உத்திரப்பிரதேச நாட்டியக் கலையின் பெயர் என்ன ?
2.புரூவா நீர் வீழ்ச்சி எங்கே உள்ளது ?
3.பாரிஜாத மலர் எப்போது மலரும் ?
4.உலக விதை வங்கி எந்த நாட்டில் உள்ளது ?
5.இந்தியாவின் முதல் சணல் ஆலை எங்குள்ளது ?
6.நம் உடலின் பீத்தநீர் எங்கு சுரக்கிறது ?
7.கான்பெரா எந்த நாட்டின் தலைநகரம் ?
8.ஒலிம்பிக் கொடியில் காணப்படும் ஐந்து வளையங்கள்
எதனை குறிக்கின்றது ?
9.சைரந்திரி என்பது யாருடைய பெயர் ?
10.யானையின் ஒடும் வேகம் எவ்வளவு ?
பதில்கள்:
1.கதக், 2.இத்தாலி,3.மாலை, 4.நார்வே, 5.ஹீக்ளி,
6.கல்லீரல், 7.ஆஸ்திரேலியா, 8.ஐந்து கண்டங்கள்,
9.திரெளபதி.10.மணிக்கு சுமார் 40 கி.மீ


இன்று நவம்பர் 6 
பெயர் : ஜேம்ஸ் நெய்ஸ்மித் ,
பிறந்ததேதி : நவம்பர் 6 , 1861
ஒரு கனடிய விளையாட்டு கல்விஆசிரியரும்,
கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க
கால்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை
கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல்
13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்;

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

1 comment:

Post Top Ad