இதற்காக மருத்துவமனைக்கு ஒட வேண்டாம் வீட்டில் இருந்தபடியே
மருத்துவரிடம் நம் நோய்க்கான பிரச்சினையைச் சொல்லி தீர்வு
காணலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உணவகமும் மருத்துவமனையும் எல்லா நாடுகளிலும் அதிகரித்து
வருகின்றன இருந்தும் எல்லா மருத்துவமனைகளிலும் கூட்டம்
குறைந்தபாடில்லை அந்த அளவிற்கு மக்களுக்கு நோய் ஒரு
நண்பனாகவே மாறி உள்ளன. சிறிய தலைவலி முதல் காய்ச்சல்
வரை அத்தனைக்கும் மருத்துவமனைக்கு செல்வதை குறைக்க
நமக்கு உதவுவதற்காக இணையத்தில் ஒரு மருத்துவர் உள்ளார்.
இவரிடம் நமக்கு இருக்கும் பிரச்சினைகளை தெளிவாக கூறினால்
உடனடியாக மருந்தும் கூறுவார்.
இணையதள முகவரி : http://symptoms.webmd.com/symptomchecker
இந்தத்தளத்திற்கு சென்று நாம் நோயின் அறிகுறியை கூறினால் போதும்
உடனடியாக தீர்வு. உதாரணமாக நமக்கு தலைவலி என்று வைத்துக்
கொள்வோம் இங்கு சென்று தலைவலி என்று கூறியவுடன் எந்த
நோய் இருந்தால் தலைவலி வரும் என்று ஒரு பெரிய பட்டியலே
கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக ஒற்றை தலைவலி என்று கூறினால்
இன்னும் சுருக்கப்பட்டு என்ன நோயாக இருக்கலாம் என்று
கூறுகிறது. நோயின் பெயரைக் கூறி தீர்வு தேடலாம். எந்த பயனாளர்
கணக்கும் தேவையில்லை உடனடியாக நோயைப்பற்றி விரிவாக
அறிந்து கொள்ளலாம். மருத்துவத்துறையில் இருக்கும் நம்
நண்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை
தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும்
ஒரு காரணம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நாதஸ்வரம் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
2.நீராவி எஞ்சினை கண்டுபிடித்தவர் யார் ?
3.பெரிலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் யார் ?
4.நீரில் கரையும் உயிர்சத்து எது ?
5.நாகேஷ் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம் எது ?
6.கந்தக அமிலம் தயாரிக்கும் முறையின் பெயர் என்ன ?
7.ரூப் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் ஆற்றுப்பள்ளதாக்கு
எது ?
8.உருது ஆட்சி மொழியாக உள்ள இந்திய மாநிலம் எது ?
9.ஜப்பான் நாடு எந்த கண்டத்தில் உள்ளது ?
10.தங்கத்தை விட பலமடங்கு விலை உயர்ந்த உலோகம் எது?
பதில்கள்:
1.ஆச்சா எனும் மரம், 2.ஜேம்ஸ் வார்ட்,3.எல்.வாக்யூலின்,
4.வைட்டமின் C,5.திருவிளையாடல், 6.பரிச முறை,
7.தாமோதர், 8.ஜம்மு காஷ்மீர், 9.ஆசியா. 10.யுரேடியம்.
இன்று அக்டோபர் 28
பெயர் : பில் கேட்ஸ் ,
பிறந்த தேதி : அக்டோபர் 28, 1955
மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர்
அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள்
வல்லுனராகவும் (CSA), பிரதம நிறைவேற்று
அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார்.
கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார்.
உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து
பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை
பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்ப சொத்து
மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment