சுருக்க பல இணையதளங்கள் வந்துள்ளன, ஆனால் ஒன்றுக்கும்
மேற்பட்ட இணையதள முகவரிகளை சுருக்கி ஒரே முகவரியாக
எப்படி மாற்றலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_3181" align="aligncenter" width="450" caption="படம் 1"]
![படம் 1](http://winmani.files.wordpress.com/2010/09/multiurl1.jpg)
ஒன்றல்ல, இரண்டல்ல நம்மிடம் எத்தனை இணையதள முகவரிகள்
இருக்கின்றதோ அத்தனையையும் சுருக்கி ஒரே இணையதள
முகவரியாக மாற்றலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://fur.ly
[caption id="attachment_3183" align="aligncenter" width="420" caption="படம் 2"]
![படம் 2](http://winmani.files.wordpress.com/2010/09/multiurl2.jpg)
எளிமையான முகப்பு பக்கம் கொண்டு இருக்கும் இந்தத்தளத்திற்கு
சென்று நாம் சுருக்க வேண்டிய இணையதளங்களை ஒன்றன் பின்
ஒன்றாக படம் 1-ல் காட்டியபடி கொடுக்கவும். எல்லா
இணையதளங்களையும் கொடுத்தபின் Go என்ற பொத்தானை
அழுத்தவும் ஒரே நொடியில் நாம் கொடுத்திருந்த அத்தனை
இணையதளங்களின் முகவரியையும் சுருக்கி ஒரே இணையதள
முகவரியாக கொடுக்கின்றனர்.படம் - 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
இந்த சுருக்கப்பட்ட முகவரியை டிவிட்டரிலும் , பேஸ்புக்-லும்
இருக்கும் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு
இணையதள முகவரியையும் சுருக்கி ஒன்றன் பின் ஒன்றாக
அனுப்புவதற்கு பதில் அனைத்து இணையதள முகவரிகளையும்
சுருக்கி ஒரே இணையதள முகவரியாக மாற்றுவதால் நேரம்
மிச்சப்படும். கண்டிப்பாக இந்தத் தகவல் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும். உதாரணமாக நாம் சுருக்கிய இணையதள முகவரியை
இங்கு கொடுத்துள்ளோம். http://fur.ly/1pgc
வின்மணி சிந்தனை
நாம் கஷ்டப்பட்டு செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு
ஒரு நல்ல பாடத்தை கற்று கொடுக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில்
வெளியீட்ட நாடு எது ?
2.தமிழ்நாட்டின் மலர் எது ?
3.உலகின் அகலமான நதி எது ?
4.உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற
ஒரே இந்தியர் யார் ?
5.திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
6.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
7.தக்காளியின் பிறப்பிடம் ?
8.மிகச்சிறிய கோள் எது ?
9.விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
10.குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
பதில்கள்:
1.போலந்து, 2.செங்காந்தள் மலர், 3.அமேசான்,
4.டாக்டர். இராதாகிருஷ்ணன்,5.சென்னிமலை, 6.ரோமர்,
7.அயர்லாந்து, 8.புளூட்டோ,9.தாய்லாந்து,10.மெர்குரி.
இன்று செப்டம்பர் 3
பெயர் : ஜேம்ஸ் சில்வெஸ்டர்,
பிறந்ததேதி : செப்டம்பர் 3, 1814
19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில்
ஒருவர். கெய்லியுடன் கூட்டாகக் கணித
ஆய்வுகள் செய்தவர். கெய்லியைப்போல் கணிதத்
துறையில் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப்
பதித்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
![PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்](http://winmani.files.wordpress.com/2010/04/pdf.jpg?w=50&h=50&h=50)
இதை போன்ற ஒன்றை நான் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி.
ReplyDeleteஎல்லா வலை தளங்களும் ஒரே பக்கத்தில் தெரியும் மேலே உள்ள சிறிய Nav bar மூலம் ஒவ்வொரு வலை தளம் மாறி மாறி பார்க்க வேண்டும்
ReplyDeleteஉங்களுடைய VinmaniVirusRemover பயன்படுத்தினேன். என்னிடம் Kasperskyஉம் உள்ளது. இரண்டையும் பயன்படுத்துவதில் ஏதும் சிக்கல் வருமா? அல்லது Kasperskyஐ நீக்கி விடலாமா? உங்களுடைய VinmaniVirusRemover பயன்படுத்த உதவியமைக்கு நன்றி.
ReplyDelete@ தணிகாசலம்
ReplyDeleteஅன்பு நண்பருக்கு இரண்டும் பயன்படுத்தாலாம் எந்த சிக்கலும் வராது.
மிக்க நன்றி