இனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, September 21, 2010

இனி ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்கலாம்

ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளையோ கட்டுரையையோ
வேகமாக படிக்க வேண்டும் என்றால் நமக்கு ஆங்கிலப்புலமை
மட்டும் போதாது, ஆங்கிலப்புத்தகத்தின் ஒரு பக்கத்தை படிக்க
வேண்டும் என்றால் கூட சில நேரங்களில் நமக்கு அதிக நேரம்
எடுத்துக்கொள்ளும் ஆனால் ஒரு இலவச மென்பொருள் மூலம்
நாம் ஆங்கிலம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



ஆங்கிலத்தை வேகமாக பேசுவது ஒரு கலை என்றால் ஆங்கில
வார்த்தைகளை வேகமாக படிப்பதும் ஒரு கலைதான்.  இப்போதுதான்
ஆங்கிலம் கொஞ்சம் வேகமாக வருகிறது என்று சொல்லும் நபர்கள்
கூட ஆங்கில வார்த்தைகளை வேகமாக படிக்க இந்த மென்பொருள்
உதவும் இங்கு கொடுத்திருக்கும் முகவரியைச் சொடுக்கி
மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.
முகவரி : http://sourceforge.net/projects/speedreaderenha/

இந்த மென்பொருளை தரவிரக்கியதும் நம் கணினியில் நிறுவத்
தேவையில்லை உடனடியாக பயன்படுத்தலாம். ஆன்லைன் -ல்
மட்டும் தான் பயன்படுத்தமுடியும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
இந்த மென்பொருளை திறந்து வலது பக்கம் இருக்கும் open file
என்பதை சொடுக்கி நாம் படிக்க விரும்பும் Text கோப்பினை தேர்வு
செய்யலாம். அல்லது அதற்கு அடுத்தாக இருக்கும் கட்டத்திற்குள்
விரும்பிய வார்த்தைகளை தட்டச்சு செய்யலாம். அடுத்து இடது
பக்கத்தின் மேல் இருக்கும் Word interval என்பதில் ஒவ்வொரு
வார்த்தையும் நாம் படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் (செகன்ட்ஸ்)
எத்தனை நொடி என்ன என்பதை கொடுக்கவும் முதலில் சற்று
அதிகமாக வைத்துக்கொள்ளவும் அதன் பின் நேரத்தை குறைத்து
கொண்டே வரலாம். நேரம் கொடுத்து முடித்த பின் நமக்கு விரும்பிய
வண்ணத்தை தேர்ந்தெடுத்துவிட்டு முழுத்திரையில் வர வேண்டும்
என்றால் Full Screen என்பதை தேர்ந்தெடுத்து டிக் செய்து கொள்ளவும்
அடுத்து Show Reader என்ற பொத்தானை அழுத்தி நாம் பயிற்சியை
தொடங்கலாம். இடையிடையே pause செய்தும் படிக்கலாம்.
கண்டிப்பாக இந்தப்பதிவு நம் ஆங்கிலம் படிக்கும் வேகத்தை
அதிகப்படுத்தும்.
வின்மணி சிந்தனை
உண்மையான நட்பு ஜாதி, மதங்களை தாண்டியது,
நட்பு என்றும் எப்போதும் மாறாது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.விழித்தெழ வைக்கும் ராகம் எது ?
2.எந்த நாடு ஒரு ராகத்தின் பெயரைக் கொண்டுள்ளது ?
3.பொற்கோவில் நகரம் என்று அழைக்கப்படுபது எது ?
4.காற்றின் வெப்பநிலை என்ன ?
5.உலகிலேயே பெரிய நகரம் எது ?
6.இலண்டனில் ’ பெரும் தீ ‘ எப்போது மூண்டது ?
7.உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம்
 எது ?
8.தொட்டப்பெட்டாவின் உயரம் என்ன ?
9.கிரேக்கர்களின் அறிவுக்கடவுள் யார் ?
10.அரசாங்கமே வட்டிக்கடை வைத்து நடத்தும் நாடு எது ?

பதில்கள்:
1.பூபாளம், 2.கனடா,3.அமிர்தசரஸ், 4.658.8K,
5.இலண்டன்,6.கி.பி.1666 ஆம் ஆண்டில்,
7.டோக்கியோ,8.8640 அடி, 9.எத்தீன்,10.மலேசியா.

இன்று செப்டம்பர் 21 
பெயர் : கெவின் ரட்,
பிறந்த தேதி : செப்டம்பர் 21, 1957

முழுப்பெயர் கெவின் மைக்கல் ரட்.
ஆஸ்திரேலியாவின் அரசியல்வாதியாவார்.
இவர் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித்
தலைவராகவும்,  நாட்டின் 26வது
பிரதமராகவும் இருந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

Post Top Ad