நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, September 13, 2010

நேரடி ஒளிபரப்பிற்காக யூடியுப்-ன் புதுமையான சோதனை முயற்சி

நேரடி ஓளிபரப்பு இணையத்தில் அதுவும் குறிப்பாக யூடியுப்-ல்
செய்தால் எப்படி இருக்கும் இதற்காக யூடியுப் புதுமையான சோதனை
முயற்சியில் இறங்கியுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு எப்படி பார்க்கிறோமோ அதைப்
போல் இனி யூடியுப்-ல் நேரடி ஒளிபரப்பை நடத்துவதற்கான முயற்சி
இப்போது யூடியுப்-ல் நடந்து வருகிறது. ஏற்கனவே யூடியுப்-ல்
Indian Premier League கிரிக்கெட் போட்டியை நேரடி ஒளிபரப்பு
செய்தது ஆனால் எதிர்பார்த்தபடி லைவ் ஸ்டிரிம் (live stream) ஆக
கொடுக்க முடியவில்லை இதற்காக லைவ் ஸ்டிரிம் நேரடி
ஒளிபரப்புக்கான சோதனை முயற்சியாக  Howcast, Young Hollywood,
Next New Networks, Rocketboom போன்ற தளங்களில் இருந்து நேரடி
ஓளிபரப்பாக வரும் வீடியோவை யூடியுப் இன்று முதல் ஒளிபரப்பு
செய்கிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வெப்கேமிரா மற்றும்
External USB/FireWire camera போன்றவற்றின் மூலம் எடுக்கும்
வீடியோவையும் யூடியுப் - மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்கான
சோதனை முயற்சியாக இது அமையவிருக்கிறது. விரைவில்
” யூடியுப் லைவ் “ என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

Howcast

Next New Networks

Rocketboom

Young Hollywood
வின்மணி சிந்தனை
பசிப்பவருக்கு உணவு கொடுக்க முடியாவிட்டாலும் இறைவா
இவர்களுக்கு உதவி செய் என்று 1 நிமிடம் நினைத்தால் கூட
போதும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்திய இராணுவப் படைகளின் தலைமைத் தளபதி யார் ?
2.வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற ஆங்கிலேயர் யார் ?
3.தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியவர் யார் ?
4.சால்வீன் என்ற நதி எந்த நாட்டில் ஒடுகிறது ?
5.எந்தத் தாது பொருளிலிருந்து அலுமினியம் கிடைக்கிறது ?
6.பாண்டூ என்ற இன மக்கள் எங்கு வாழ்கின்றனர் ?
7.இந்தியாவில் பென்சிலின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது ?
8.இந்தியாவின் பெரிய நகரம் எது ?
9.நம் கண்களால் எத்தனை விதமான நிறங்களை பிரித்துணர
 இயலும்?
10.போனோ (Phono meter) மீட்டர் என்பது என்ன ?

பதில்கள்:
1.குடியரசுத்தலைவர்,2.ஆஷ்துரை,3.லால்பகதூர் சாஸ்திரி,
4.பர்மா, 5.பாக்ஸைட், 6.ஆப்பிரிக்கா,7.மும்பை -பிம்பிரி
என்ற இடத்தில்,8.கொல்கத்தா,9.17,000 விதமான நிறங்கள்,
10.ஒளியின் அளவை அறியப்பயன்படுக் கருவி.

இன்று செப்டம்பர் 13 
பெயர் : ஷேன் வார்னே,
பிறந்த தேதி : செப்டம்பர் 13, 1969

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர். உலகின்
முன்னணிச் சுழற்பந்தாளராகத் திகழ்ந்த இவர்
ஜனவரி 2007-ல் சர்வதேசத் கிரிக்கெட்
விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் 700 இலக்குகளை வீழ்த்திய
முதல் வீரர் இவராவார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

 1. இந்த நேரடி ஒளிபரப்பிற்கான நேர அட்டவணையை அழகிய விட்ஜட் ஒன்றினூடாக யுடியூப் வெளியிட்டுள்ளது. யுடியூப் இணையதளத்தின் உத்தியோக பூர்வ வலைப்பதிவினை நாடுங்கள்

  ReplyDelete
 2. @asfersfm
  நண்பருக்கு ,
  வேர்டுபிரஸ் இதற்கு துணை செய்யவில்லை என்ற காரணத்தால் வெளீயிடவில்லை.
  மிக்க நன்றி

  ReplyDelete

Post Top Ad