அளவில் வண்ணதிரையுடன் வெளிவந்திருக்கிறது. இதைப்பற்றிய
சிறப்புப்பதிவு வீடியோவுடன்.
புதுமை செய்வதில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வந்து
கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதுமையான
வெளியீடாக நேனோ ஐபாட் வண்ணத்திரையுடன் வெளிவந்திருக்கிறது.
பிரபலங்களின் படத்துக்கு மட்டும் தான் டிக்கெட் கிடைக்காது
என்ற காலம் மாறி ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை பதிவு
செய்து வாங்க வேண்டியது இருக்கிறது என்றால் மிகையல்ல
அந்த அளவிற்கு வேகமாக விற்பனை ஆகிறது. ஐபேட் அலை
இப்போது தன் சற்று வேகத்தை குறைத்திருக்கும் நிலையில்
நேனோ ஐபாட் கண்ணை கவரும் வகையில் வெளிவந்துள்ளது.
240 பிக்சஸல் ரிசொல்யுசன் மற்றும் நீடிக்கப்பட்ட பேட்டரி லைப்,
மற்றும் அதிகரிக்கப்பட்ட மெமரி போன்றவற்றுடன் (Multi touch)
தொடுதிரை வசதியுடன் தற்போது வெளியாகியுள்ளது. இதன் சிறப்பு
அறிமுக வீடியோவைப் பார்த்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.
வின்மணி சிந்தனை
மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாமல் இருக்கிறது.
நம் வாழ்வின் அத்தனை நிகழ்ச்சிகளையும் சந்தோஷமாக
எடுத்துக்கொள்வோம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?
2.தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?
3.கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
4.கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?
5.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை
கடப்பதாகும்?
6.ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?
7.காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
8.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?
9.தடுக்கப்பட்ட நகரம் எது ?
10.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?
பதில்கள்:
1.லேண்ட் டார்ம், 2.சயாம், 3.ராஜஸ்தான்,4.1593,
5.26 மைல், 6.கி.பி.1560, 7.சிக்காகோ,
8.1920,9.லரசா,10.420 மொழிகள்.
இன்று செப்டம்பர் 5
பெயர் : வ. உ. சிதம்பரம்பிள்ளை,
பிறந்ததேதி : செப்டம்பர் 5, 1872
கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு
உரிமையோடு விளங்க வேண்டுமென்றால்
முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்
இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க
வேண்டும் என்று கூறியவர். உங்களால் நம் தேசத்துக்கு பெருமை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
vaalga thamilan
ReplyDelete@ john.s
ReplyDeleteநன்றி