கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, August 6, 2010

கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள்

குகுளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் கிடைக்கும்
முடிவுகளில் பெரும்பாலானவை கூகிள் புக்ஸ் இணையதளத்திற்கு
சென்று புத்தகத்தின் பக்கத்தை நமக்கு காட்டுகிறது. புத்தகங்கள்
பலவற்றை பல உலாவிகளில் நாம் படிக்க முடிவதில்லை, கூடவே
அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல்
கூகுள் புத்தகங்களைத் தேடவும் படிக்கவும் புதிதாக ஒரு டெஸ்க்டாப்
மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



சில மில்லியன் இலவச புத்தகங்களை தன்னகத்தே வைத்தும் பல
மில்லியன் புத்தகங்களின் முக்கியமான பக்கங்களை வைத்தும் உள்ள
கூகுள் புக்ஸ் தளங்களில் சென்று நாம் புத்தகத்தை உலாவி வழியாக
தேடுவதற்கு பதிலாக ஒரு மென்பொருள் வந்துள்ளது. மென்பொருளின்
பெயர் கூரீடர்(GooReader) இந்தச் சுட்டியைச் சொடுக்கி மென்பொருளை
தரவிரக்கிக்கொள்ளவும்.

Download

இந்த மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும்
அடுத்து இந்த மென்பொருளை இயக்கி நமக்கு தேவையா புத்தகத்தின்
பெயரைக் கொடுத்து தேடவேண்டியது தான் உடனடியாக நமக்கு
புத்தகங்களை காட்டுகிறது இதிலிருந்து நாம் பார்க்க விரும்பும்
புத்தகத்தை சொடுக்கினால் தனி புத்தகமாக நமக்கு இபுக் வடிவில்
திறந்து பார்க்கும்படி உள்ளது. அனைத்து வகையான புத்தகங்களையும்
நாம் இந்த மென்பொருளின் மூலம் சில நிமிடங்களில் பார்க்கலாம்.
புத்தகப்பிரியர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும். மென்பொருளின் அளவு 1.1 MB தான். விண்டேஸ் எக்ஸ்பி
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் நாம்
இதை டெஸ்க்டாப் அப்ளிகேசனாகப் பயன்படுத்தலாம்.இந்த
மென்பொருளைப்பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன்
இணைத்துள்ளோம்






வின்மணி சிந்தனை
நாம் எந்த தவறும் செய்யாமல் அடுத்தவர் நம்மை திட்டினாலும்
அதை காதில் வாங்காமல் செல்லுங்கள். தன்னை அறியாமல்
பிழை செய்யும் அவர்களை நாம் தான் மன்னிக்க வேண்டும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.நெடுந்தொகை எனக் கூறப்படும் நூல் எது ?
2.குறிஞ்சிப்பாட்டு யாரால் எழுதப்பட்டது ?
3.சென்னையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் எப்போது
தொடங்கப்பட்டது ?
4.இந்தியாவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு
தடைவிதிக்கப்பட்ட முதல் மாநிலம் எது ?
5.புறா பந்தயத்தின் தாயகம் எது ?
6.’பத்மஸ்ரீ’ பட்டம் வாங்க மறுத்த பத்திரிகை ஆசிரியர் யார் ?
7.டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் பிறந்த ஊர் எது ?
8.2001 - 2002 ஆம் ஆண்டை மத்திய அரசு என்ன ஆண்டாக
அறிவித்தது ?
9.சென்னையில் சிறிய சட்டமன்றத் தொகுதி எது ?
10.நமது உடலில் கனமான உறுப்பு எது ?

பதில்கள்:
1.அகநானுறு, 2.கபிலர்,3.பிப்ரவரி 17,2001
4.கேரளா, 5.பெல்ஜியம்,6.ஏ.என். சிவராமன்,7.மோவு,
8.அகிம்சை ஆண்டு,9.சேப்பாக்கம்,10.மூளை.

இன்று ஆகஸ்ட் 6   
பெயர் : அலெக்சாண்டர் பிளெமிங்
பிறந்த தேதி : ஆகஸ்ட் 6, 1881

நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக்
கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர்
கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம்
நொடேடம் என்ற பூஞ்சையிலிருந்து
பிரித்தெடுத்தவர்.


PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

18 comments:

  1. புத்தகப் பிரியர்களுக்கு நல்ல பயனான பதிவு. உங்கள் சிந்தனை முழுமையும் சாத்வீகத்தையே தழுவியுள்ளது. வின்மணி. அன்றாடம் ஒன்றைப் படித்தாலே மனம் நெகிழ்ந்து விடுகிறது. உங்கள் சிந்தனை ஊற்று தொடரட்டும்.

    ReplyDelete
  2. @ தணிகாசலம்
    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  3. வழக்கம் போல் அருமையான தகவல். புத்தகங்களை தரவிரக்குவது குறித்தும் விளக்கி இருக்கலாமே

    ReplyDelete
  4. @ Rajasurian
    புத்தகத்தின் பெயரை மட்டும் கொடுத்தால் போதும் நண்பரே..
    நன்றி

    ReplyDelete
  5. ஹி ஹி அது paid version-ல மட்டும் தான் இருக்காம்ல

    ReplyDelete
  6. @ Rajasurian
    அதிலே வழி இருக்கு நல்லா பாருங்க புரியும்.
    நன்றி

    ReplyDelete
  7. ramalingam natarajanAugust 7, 2010 at 9:59 PM

    உபயோகமான பதிவு. நன்றி

    ReplyDelete
  8. @ ramalingam natarajan
    மிக்க நன்றி

    ReplyDelete
  9. எனக்கு புரியல :(

    இப்போதைக்கு print screen மூலமா எடுத்துக்கிட்டு இருக்கேன். தயவுபண்ணி நேரமிருக்கும்போது விளக்குங்கள்

    ReplyDelete
  10. @ Rajasurian
    நெருங்கி வந்திட்டிங்க கொஞ்சம் யோசித்தால் விடை கிடைக்கும்.
    கண்டிப்பாக விரைவில் இதைப்பற்றி சொல்கிறோம்.
    நன்றி

    ReplyDelete
  11. என் மூளைக்கு இதுவே அதிகம். உங்கள் விளக்கத்திற்காக வெயிட்டிங் ....

    ReplyDelete
  12. தாமஸ் ரூபன்August 8, 2010 at 3:30 AM

    என்னைப் போன்ற புத்தகப் பிரியர்களுக்கு நல்ல அருமையான தகவல்கள் நன்றி சார் ....

    தரவிரக்குவது:-

    open------>view in browser---->downlad--->pdf---->OK

    சரிதானே ஐய்யா...

    ReplyDelete
  13. @ Rajasurian
    சொல்கிறோம்.
    நன்றி

    ReplyDelete
  14. @ தாமஸ் ரூபன்
    சரிதான் இன்னொரு முறையும் இருக்கிறது, விரைவில் நேரம் கிடைத்தால் இதைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு கொடுக்கிறோம்.

    ReplyDelete
  15. தாமஸ் ரூபன்August 8, 2010 at 9:02 PM

    //இன்னொரு முறையும் இருக்கிறது//

    open——>view in browser—->link copy---->Google Books Download(மென்பொருள்)--->save

    இதுவும் சரிதானே ஐய்யா.....

    //விரைவில் நேரம் கிடைத்தால் இதைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு கொடுக்கிறோம்.//

    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மிக்க நன்றி ...

    ReplyDelete
  16. @ தாமஸ் ரூபன்

    thanks

    @ winmani

    thanks for ur kindness

    ReplyDelete
  17. மிக்க நன்றி. பயனுள்ளதாக உள்ளது.. எளிதாகவும் உள்ளது.

    ReplyDelete

Post Top Ad