கணினி பயன்படுத்துபவர்கள் முதல் புரோகிராமர் வரை அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு. - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, August 28, 2010

கணினி பயன்படுத்துபவர்கள் முதல் புரோகிராமர் வரை அனைவரின் பிரச்சினைக்கும் தீர்வு.

கணினியில் இப்போது தான் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் அதற்குள்
என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்
கணினியின் புரோகிரமருக்கும் சில நேரங்களின் மண்டை குடைச்சலை
கொடுக்கும் புரோகிராம் பிழை (Error) -க்கும் எளிதான வகையில் தீர்வு
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



கணினியில் வித்தியாசமாக ஏதோ பிழை செய்தி காட்டுகிறது நானும்
கூகுளில் சென்று தேடினேன் பல முடிவகள் கொடுத்தாலும் என்னால்
எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்பவர்களுக்கும்,
புரோகிராம்-ல் சாதாரண Array Function தான் இப்படி எல்லாம் பிழை
செய்தி காட்டுமா என்று எனக்கு இப்போது தான் என்று தெரிகிறது என்று
சொல்வபவர்களுகும் இதற்கு தீர்வு தேடி பல தளங்கள் செல்லவேண்டாம்
ஒரே தளம் அனைத்து கணினி பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்கிறது

இணையதள முகவரி : http://www.errorhelp.com



பிழை உதவி ( Error Help) இதைதான் மையமாக வைத்து இந்தத்தளம்
செயல்படுகிறது. மற்றதளங்களைப்போல அல்லாமல் பிரச்சினையை
நாம் கூறினால் போதும் அதற்கான தீர்வை இலவசமாக தேடிக்
கொடுக்கின்றனர். இதை ஏற்கனவே எத்தனை பேர் பயன்படுத்தி
உள்ளனர். எந்ததளத்தில் நம் பிரச்சினைக்கான தீர்வு இருக்கிறது
அதன் இணையதள முகவரி என்ன என்று தெளிவாக நமக்கு
காட்டுகிறது, நீங்கள் கேட்கும் பிரச்சினை இதுவரை வரவில்லை
என்றால் 48 மணி நேரத்திற்க்குள் சரியான பதிலை கொடுக்க
முயற்சி செய்கிறோம் என்றும் கூகுளில் நம் பிரச்சினையைத்
தேடி அதற்கான தீர்வையும் இவர்களின் இணையப்பக்கதிலே
காட்டுகின்றனர். கண்டிப்பாக இந்தத் தகவல் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
அன்பும், கொடைத்தன்மையும் தமிழர்களின் பரம்பரைச் சொத்து
எப்போதும் அதை மறக்காதீர்கள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
2.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது ?
3.இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் தலைவர் யார் ?
4.விவசாய உற்பத்தியில் முன்னனியில் வசிக்கும் மாநிலம் எது?
5.வங்காளம் பிரிக்கப்பட்ட ஆண்டு எது ?
6.இந்தியா மயிலை தேசிய பறவையாக அறிவித்த ஆண்டு எது?
7.தென்துருவத்தின் தீர்க்கரேகை அளவு என்ன ?
8.சோமநாத் கோவில் எதனால் கட்டப்பட்டது ?
9.அஜந்தா குகை மொத்தம் எத்தனை குகைகளைக் கொண்டது?
10.உலகில் எவ்வளவு மக்கள் சீன மொழி பேசுகின்றனர் ?

பதில்கள்:
1.ஆறுகள்,2.அரிசி,3.டாக்டர் இராஜேந்திரபிரசாத்,
4.பஞ்சாப்,5.1905,6.1964,7.90 டிகிரி,8.செங்கல்,மரம்,
9.29 குகைகள்,10.975 மில்லியன் மக்கள்.

இன்று ஆகஸ்ட் 28  
பெயர் : ராபர்ட் கால்டுவெல் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 28, 1891

ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி
நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட
மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில்
இவருக்கு பெரும்பங்கு உண்டு.அகழ்வாய்வுகளில்
ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின்
அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள்
முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

17 comments:

  1. @ முனைவர்.இரா.குணசீலன்
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. parameswaran.c(HONEY BEES 001)October 11, 2010 at 7:01 PM

    nandri HONEY BEES SOCIAL ORGANIZATION -SATHY&THALAVADI

    ReplyDelete
  3. அருமை வின்மணி
    கலக்கல் கண்மணி

    ReplyDelete
  4. @ Abdullah ibnu zubair
    நன்றி

    ReplyDelete
  5. தஸ்தகீர்January 7, 2011 at 12:15 PM

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. @ தஸ்தகீர்
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. good useful qustions kalpana.d.k

    ReplyDelete
  8. @ kalpana
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad