இலவசமாக ஏஜெண்ட் மூலம் சரியான வேலையைத் தேடலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, August 21, 2010

இலவசமாக ஏஜெண்ட் மூலம் சரியான வேலையைத் தேடலாம்.

நம் படிப்புக்கும் அனுபவத்துக்கு ஏற்ற சரியான வேலையை பணச்செலவு
இல்லாமல் இலவசமாக ஏஜெண்ட் மூலம் தேடி நல்ல வேலையைப்
பெறலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



நமக்கு தாய் மொழி தமிழ் மட்டும் தான் நன்றாக வரும் , ஆங்கிலம்
அவ்வளவு தொடர்ச்சியாக பேச வராது ஆனால் கணினி புரோகிராம்
மொழி நன்றாக தெரியும், பல பிராஜெக்ட் செய்து இருக்கிறேன் என்று
பலர் இருக்கின்றனர். இவர்களுக்காக வேலையைத் தேட ஒரு
ஏஜெண்ட் இருக்கிறார். ஏஜெண்ட் என்றால் என்னவெல்லாம்
செய்வாரோ அதை எல்லாம் ஒரு இணையதளம் செய்கிறது. நமக்கு
பயோடேட்டா உருவாக்கி தருவதில் இருந்து வேலையை வாங்கி
நம் கையில் கொடுப்பது வரை அத்தனை வேலையையும் இந்தத்
தளம் செய்கிறது. கூடவே நமக்காக வேலைக்கு ஆள் தேவை என்ற
அறிவிப்பு வந்திருக்கும் நிறுவனத்திற்கு நம் பயோடேட்டாவையும்
அனுப்பிவிடுகிறது. நாம் அனுப்ப வேண்டியதில்லை நம் ஏஜெண்ட்
அனுப்பி விடுகிறார். பல மென்பொருள் நிறுவனங்கள் மொழிக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து
சரியான ஆட்களை இதன் மூலம் தேர்ந்தெடுகின்றனர்.ஆங்கில மொழி
பேச முடியாமல் இருக்கும் நம் தமிழ் நண்பர்களுக்கு இந்தத் தளம்
மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும்
இல்லை.கண்டிப்பாக இந்தப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : https://www.quietagent.com
வின்மணி சிந்தனை
ஏமாளியாக இருப்பனிடம் தான் கடவுள் தன்மை
இருக்கும் , ஏமாற்றுபவன் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.பச்சையம் இல்லாத தாவரம் எது ?
2.சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கிய
 நாடு எது ?
3.மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது ?
4.நீந்தத் தெரியாத மிருகம் எது  ?
5.எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது ?
6.எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு எது ?
7.இந்தியாவின் பெரிய நகரம் எது ?
8.மிக உயரமான எரிமலை எது ?
9.கங்காரு தாவும் தூரம் எவ்வளவு ?
10.இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள்:
1.காளான்,2. இந்தியா,3.டிசம்பர் 10,4.ஒட்டகம்,
5.பருத்தி,6.அவுரங்காபாத்,7.கொல்கத்தா,
8.கேடபாக்சி,9.15 அடி,10.பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

இன்று ஆகஸ்ட் 21  
பெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 21, 1995

இவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார்.
இந்தியாவில் லாகூரில் பிறந்தவர்.விண்மீன்கள்
பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும்
வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

9 comments:

  1. இந்த தளம் திறக்க முடியவில்லை , தயவு செய்து இதை திறப்பதற்கான வேற வழிகள் தந்து உதவவும்
    நன்றி
    சசி

    ReplyDelete
  2. @ Sasi
    இப்போது திறந்து பாருங்கள்.
    http://www.quietagent.com

    நன்றி

    ReplyDelete
  3. your link doesnt work.....ERROR MSGE COMES .........

    This Connection is Untrusted

    You have asked Firefox to connect
    securely to www.quietagent.com, but
    we can't confirm that your connection is secure.
    Normally, when you try to connect securely,
    sites will present trusted identification to prove that you are
    going to the right place. However, this site's identity can't be verified.

    ReplyDelete
  4. @ HASAN
    பலபேரின் Resume இந்தத்தளத்தில் இருப்பதால் தகவல் திருடப்பட்டுவிடக்கூடாதே
    என்பதற்காக செக்யூரிட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. நீங்கள் Get Security certificate ஒகே கொடுத்தால் பிரச்சினை இல்லாமல் தெரியும்.
    முயற்சித்துப் பாருங்கள். வரவில்லை என்றால் வேறு உலாவியில் பயன்படுத்திப்
    பாருங்கள்.
    நன்றி

    ReplyDelete
  5. நீங்கள் தரும் அணைத்து செய்திகளும் மிகவும் பயமிக்கதாக உள்ளது... நன்றிகள்... சேவை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. @ Hanimakers
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. சிறந்த பகிர்தல்!

    இனி மேலாவது வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றும் பேர்வழிகளிடம் சிக்கி, வழி தெரியாமல் விழிக்கும் தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களாக!

    ReplyDelete
  8. முதலில் மெயில் பாஸ்வேர்டை பதிவு செய்ய கோருகிறது. அது வெற்றிகரமாக முடிந்து Account created! என்ற வாசகத்துடன் மற்ற தகவல்களை பூர்த்தி செய்ய சொல்கிறது. அதில் Country, What is your highest level of education?, What job level are you looking for? என மூன்றிக்கும் ஸ்ரோல் பார் வைக்கப்பட்டுள்ளது.அது வேலை செய்ய வில்லை.எனவே பதிவு செய்ய
    முடியவில்லை.

    ReplyDelete
  9. @ ஜெகதீஸ்வரன்
    நண்பருக்கு ,
    பயர்பாக்ஸ் உலாவியில் முயற்சி செய்யுங்கள். பிரச்சினை தீர்ந்து விடும்.
    நன்றி

    ReplyDelete

Post Top Ad