டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, July 17, 2010

டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.

பாடல் முதல் வீடியோ வரை டாக்குமெண்ட் முதல் மென்பொருள்
வரை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக இணையத்தில்
வேகமாக பரவிவரும் டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும்
இல்லாமல் தரவிரக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

டோரண்ட் கோப்புகள் தரவிரக்க பல மென்பொருள்கள் வந்தாலும்
அத்தனையும் தாண்டி எந்த மென்பொருள் துனையும் இல்லாமல்
நாம் பயன்படுத்தும் இணைய உலாவியிலே நேரடியாக டோரண்ட்
கோப்புகளை தரவிரக்கலாம் இதற்காக ஒரு இணையதளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.kickasstorrents.com

இந்த தளத்திற்கு சென்று நாம் தேடும் பாடலையோ அல்லது
டாக்குமெண்ட் கோப்புகளையோ கொடுத்து தேடவேண்டும்
கிடைக்கும் முடிவுகளில் நாம் தேடிய சரியான டோரண்ட்
கோப்பை தேர்ந்தெடுத்து Direct Download என்ற பொத்தானை
அழுத்தி தரவிரக்க வேண்டியது தான் ஏற்கனவே இதை
தரவிரக்கியவர்கள் நன்றாக இருக்கிறதா அல்லது இல்லையா
என்ற தகவலும் கூடுதலாக கிடைக்கும். தேவையில்லாத
கோப்புகளை இங்கு தரவிரக்கும் போது பல நேரங்களில் நம்
கணிக்கு வைரஸ் வந்துவிடவும் வாய்ப்பு உண்டு அதானால்
ஏற்கனவே தரவிரக்கியவர்கள் கொடுக்கும் பின்னோட்டத்தை
பார்த்த பின்னரே தரவிரக்குவது சிறந்தது.
வின்மணி சிந்தனை
ஒரு மனிதன் தனக்கு செய்த தீங்கை மனதால் நினைத்து
பார்த்தாலே நாம் அடுத்தவருக்கு துன்பம் செய்ய தோன்றாது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.பயணிகளை சுமந்து கொண்டு பறந்த முதல் விமானம் எது ?
2.ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது ?
3.புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார் ?
4.ஒரு கடல் மைல் என்பது எவ்வளவு தூரம் ?
5.இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் மிகச்சிறிய
நாடு எது?
6.குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது ?
7.இந்தியாவின் மிகப் பழமையான செய்தித்தாளின் பெயர் என்ன?
8.போட்ஸ்வானா நாட்டின் கரன்ஸியின் பெயர் என்ன ?
9.உலகின் முதல் அருங்காட்சியகம் எது ?
10.இன்றும் மரத்தினால் செய்த செருப்பை உபயோகிக்கும்
 நாடு எது?

பதில்கள்:
1.டக்ளஸ் DC-3, 2.டொமினிகன் குடியரசு,3.லட்டியன்ஸ்,
4.1-925 கி.மீ,5.பூடான்,6.ஆந்திரா,7.மும்பை சமாச்சார்,8.புலா,
9.ஆஸ்ரமாலியன்,10.செயிண்ட் நிக்கலஸ்.

இன்று ஜூலை 16  
பெயர் : டி.கே.பட்டம்மாள்,
மறைந்ததேதி : ஜூலை 16, 2009
ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். 1962-ம் ஆண்டில்
சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல்
பத்மபூசன்,1998ம் ஆண்டில் பத்மவிபூசன்,
தேசியகுயில்,சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல
விருதுகளை வென்றவர். புகழ் பெற்ற பாடகி நித்யஸ்ரீ
மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

7 comments:

  1. Wow .... excellent. Boss.. இதுல வைரஸ் கூட சேர்ந்து download ஆகதுல்ல

    ReplyDelete
  2. Your posts are always special.

    Thanks.

    ReplyDelete
  3. Boss,When I try to download the file type shows unknown.What should I do to download correct file?.....

    ReplyDelete
  4. @ M.G.R
    unknown கோப்புகளை தரவிரக்க வேண்டாம்.
    நன்றி

    ReplyDelete
  5. @ Elamurugan
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. Thanks friend... its very useful....

    ReplyDelete

Post Top Ad