டெக்ஸ்ட்டாக்குமெண்ட் மூலம் ஆன்லைன்-ல் சாட் செய்யும் விநோதம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, July 11, 2010

டெக்ஸ்ட்டாக்குமெண்ட் மூலம் ஆன்லைன்-ல் சாட் செய்யும் விநோதம்

நாம் தட்டச்சு செய்யும் டெக்ஸ்ட்டாக்குமெண்டை அப்படியே
ஆன்லைன் மூலம் அதற்கு இணைய முகவரி உருவாக்கி நம்
நண்பர்களுடன் நொடியில் பகிர்ந்து கொள்ளலாம். எப்படி என்பதைப்
பற்றிதான் இந்த பதிவு.

[caption id="attachment_2658" align="aligncenter" width="449" caption="படம் 1"][/caption]

டெக்ஸ்ட்டாக்குமெண்ட் உருவாக்குவது மிக மிக எளிதான வேலை தான்
ஆனால் நாம் உருவாக்கிய டெக்ஸ்ட்டாக்குமெண்டை அப்படியே
ஆன்லைன் மூலம் பகிர்ந்துகொள்ள முடியுமா என்றால் இல்லை
அதை மெயில் மூலம் தான் பகிர்ந்துகொள்ள முடியும் ஆனால்
நமக்கென்று ஒரு டெக்ஸ்ட்டாக்குமெண்ட் பெயர் உருவாக்கி
வைத்துக்கொண்டு அப்பப நமக்கு தேவையான செய்திகளையும்
படங்களையும் இணையத்தில் உள்ள அனைவரிடமும் பகிர்ந்து
கொள்ளலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு இணையதளம்
உள்ளது.


இணையதள முகவரி : http://justpaste.it




[caption id="attachment_2659" align="aligncenter" width="265" caption="படம் 2"][/caption]

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் இருப்பது போல்
டெக்ஸ்ட்டாக்குமெண்டின் உள்ளே தட்டச்சு செய்துகொள்ள வேண்டும்
அடுத்து படம் 2-ல் உள்ளது போல் வலதுபக்கத்தின் மேல் இருக்கும்
Custom page name என்பதில் நாம் உருவாக்கும் டெக்ஸ்ட்-
-டாக்குமெண்டை சேமித்து வைக்கும் பெயரை கொடுக்கவும்.
உதாரனமாக நாம் winmani என்று கொடுத்துள்ளோம்.எல்லாம்
தட்டச்சு செய்து முடித்ததும் publish என்ற பொத்தானை அழுத்தவும்.
இனி உங்களுக்கென்று உருவாக்கிய டெக்ஸ்ட்டாக்குமெண்ட்
பக்கத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள்
விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். படங்களைக்கூட சேர்த்துக்
கொள்ளலாம். ஒரு தடவைபக்கத்தின் டெக்ஸ்ட்டாக்குமெண்ட்
பெயரை உருவாக்கினால் போதும் எத்தனை முறை
வேண்டுமானாலும் அதே பக்கத்தில் தகவல்களை நம் நண்பர்களுடன்
பகிர்ந்துகொள்ளலாம். சாட் வசதி அனுமதிக்காத அலுவலகங்களில்
இணையதளம் மூலம் இப்படி கூட உரையாடலாம். கண்டிப்பாக
இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


நாம் உருவாக்கிய முகவரி : http://justpaste.it/winmani




வின்மணி சிந்தனை
தேசங்கள் விட்டு , நாடு விட்டு வாழ்ந்தாலும், எங்கே
சென்றாலும் கூட மனதில் நிரம்பி இருப்பது அன்புதான்
என்றால் கடவுளைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.பெட்ரோலியம் நட் என்னும் மரவகைகள் எந்த நாட்டில்
வளர்கின்றன ?
2.உலகிலேயே மிகச்சிறிய புத்தகம் எது ?
3.யுனானி வைத்திய முறை பிறந்த நாடு எது ?
4.பைபிள் நிகழ்ச்சிகளை பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாடு எது?
5.பூமியின் மொத்த பரப்பில் தண்ணீரின் பரப்பளவு என்ன ?
6.புழு , பூச்சிகளை தாக்காத மரம் எது ?  
7.மகாராஷ்டிர மாநிலத்தின் எப்பகுதியில் ஆதிவாசிகள்
வசிக்கின்றனர் ?
8.உலகிலேயே முதல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின்
பெயர் என்ன ?
9.உலகிலேயே மிகப்பெரிய சுவர்க்கடிகாரம் எங்குள்ளது ?
10.டீசலை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள்:
1.பிலிப்பைன்ஸ், 2.உமர்கய்யம் காவியம் - 1933,3.கிரேக்கம்,
4.அப்காசியாவில் உள்ள செபல்டா மலை,5.222.4 கோடி ச,கி,மீ
6.வேப்பமரம்,7.செளதா என்னும் பகுதியில், 8.லூயிஸ் வாஸ்,
9.பிரான்ஸ் அஸ்ட்ரானமிகல் கடிகாரம்,10.ரூடால்ப் டீசல்.



இன்று ஜூலை 10 
ஜூலை 10, 1973
பஹாமாஸ் விடுதலை நாள்

அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000
மணல் மேடுகளையும் 700 தீவுகளையும்
கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க
நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழகுத்
திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும்
பிரிட்டானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான
துர்கசும் கைகோசுவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad