இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, July 2, 2010

இரண்டு நிமிடத்தில் மொபைல் போன் மூலம் கண் பரிசோதனை செய்யலாம்

கண்களை பரிசோதித்து கண்ணாடி அணிவது எல்லாம் ஒரு காலம்
ஆனால் இப்போது மொபைல் மூலம் எளிதாக மருத்துவமனைக்கே
செல்லாமல் நம் கண்னை பரிசோதிக்கலாம் எப்படி என்பதைப்பற்றி
தான் இந்த பதிவு.



கண்களை பரிசோதிக்க எத்தனையோ பல புதிய வழிமுறைகள்
இருந்தாலும் அத்தனையும் தாண்டி இப்போது புதிதாக ஒரு
மொபைல் போன் மற்றும் சிறிய கருவி துனை கொண்டு நம்
கண்ணை பரிசோதித்துக்கொள்ளலாம் எந்த மருத்துவரும்
தேவையில்லை எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டாம்
காலத்தின் வேகமான வளர்ச்சியால் விஞ்ஞானிகள் இந்த
புதுவித கருவியை உருவாக்கியுள்ளனர்.இந்த கருவியை நம்
மொபைல் போனில் பொருத்திவிட வேண்டும் இதற்க்கான
அப்ளிகேசனும் இலவசமாக கிடைக்கிறது. இதை நிறுவிக்கொண்டு
நம் கண்னை எளிதாக சோதிக்கலாம். எந்த கண்ணாடி லென்ஸ்
அளவு என்ன என அனைத்தையும் நமக்கு காட்டிவிடும் இந்த
கருவியின் ஹார்டுவேர் சிக்கிராப் 2010 கொண்டும் இதற்க்கான
பெயர் நெட்ரா என்றும் வைத்துள்ளனர். அனைத்து ஸ்மார்ட்போன்
மற்றும் சேம்சங்,கூகுள் நெக்சஸ் போனிலும் இது சோதிக்கப்பட்டு
சோதனை ஓட்டத்திலே அனைவரின் கவனத்தை மட்டுமல்ல
நம்பிக்கையையும் பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த
கருவி விலைக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய சிறப்பு
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.






வின்மணி சிந்தனை
கடவுள் சில நேரங்களில் சிறிய பிரச்சினைக்கு கூட நம்மை
முழவதுமாக சோதிப்பான் ஆனால் இறுதியில் வெற்றியை
நம் பக்கம் தருவான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.ஆயுள் முழுவதும் மாறாதது எது ?
2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன ?
3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது ?
4.குதுப்மினார் கோவிலின் நிழல் விழாத நாள் எது ?
5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது ?
6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது ?  
7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது ?
8.சணலின் சிறப்புப் பெயர் என்ன ?
9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும்
மாநிலம் எது ?
10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள் ?

பதில்கள்:
1.ரத்தவகை, 2.சபீனா,3.தெலுங்கு மொழி,4.ஜீலை 20,
5.அஸ்ஸாம் மாநிலத்தில், 6.கங்கை டெல்டா பகுதி,
7.சில்கா ஏரி, 8.தங்க இழை,9.உத்திரப்பிரதேசம்,
10.மூன்று.

இன்று ஜூலை 1 
பெயர் : கல்பனா சாவ்லா,
பிறந்ததேதி : ஜூலை 1, 1961
இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த
முதல் பெண்மணி. STS-107 என்ற கொலம்பியா
விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும்
பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில்
உயிரிழந்தார்.கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக
நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் வைத்துள்ளனர்.


PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

7 comments:

  1. அன்புடன் நண்பருக்கு வணக்கம் என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.அதை விட இந்த விஷயத்தை உடனடியாக எல்லோரும் பயன்பட வேண்டும் என கொண்டு வந்து தருவது ..அதுக்குதான் பாராட்டு ..விண்மணி சிந்தனை ஒண்ணு எழுதி இருக்கீங்க பாருங்க... இந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை!!! மிக மிக அருமை. இதுபோன்ற தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை பார்த்தாலே இறைவனை கண்ட மாதிரி.. (உங்க எழுத்தை பார்த்தாலே உங்களை பார்த்த மாதிரி.)வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ s.n.ganapathi
    நன்றி

    ReplyDelete
  3. Ilakkuvanar ThiruvalluvanJuly 3, 2010 at 5:00 PM

    மொபைல் / மொபைல் போன் -அலைபேசி
    கண்னை பரிசோதிக்கலாம் - கண்ணை ப் பரிசோதிக்கலாம் (கண்களை ஆய்வு செய்யலாம்)
    என்பதைப்பற்றிதான் - என்பதைப்பற்றித்தான்
    கண்களை பரிசோதிக்க - கண்களைப் பரிசோதிக்க
    துனை - துணை
    புதுவித கருவியை - புதுவிதக் கருவியை
    இதற்க்கான - இதற்கான
    அப்ளிகேசனும் - விண்ணப்பமும்
    எளிதாக சோதிக்கலாம் - எளிதாகச் சோதிக்கலாம்
    எந்த கண்ணாடி லென்ஸ் - எந்தக் கண்ணாடி வில்லை
    ஹார்டுவேர்- கருவியம்
    - இவ்வாறு அறிவூட்டும் விண்மணியின் ஒரு பத்தியில் இத்தனைப் பிழைகள் மலிந்து இருக்கலாமா? திருத்துக. பதியுநர் அல்லது எழுதுநர் விழைந்தால் பிழையின்றி எழுதுவதற்குப் பயிற்சி அளிக்கின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    ReplyDelete
  4. @ Ilakkuvanar Thiruvalluvan
    ஆழ்ந்த தமிழறிவு உடைய நீங்கள் சொல்லித் தரும் போது அது கிடைப்பதே எங்கள்
    பாக்கியம். விண்மனியின் செய்தி சேகரிப்பாளரும் எழுதுபவரும் ஒருவரே, அதானால்
    தாங்கள் எப்போது சொல்லிக்கொடுக்க நேரம் இருக்கும் என்று கூறினால் கண்டிப்பாக
    தொடர்பு கொள்கிறோம்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. Ilakkuvanar ThiruvalluvanJuly 4, 2010 at 4:20 PM

    அன்புடையீர்
    வணக்கம்.
    நாங்கள் எழுதுவதுதான் சரி என்ற பிடிவாதத்தில் இல்லாமல் பிழையறச் செய்தியைத் தர வேண்டும் என்னும் உணர்விற்குப் பாராட்டுகள்.
    என்னுடைய பேசி எண் : 98844 81652
    தொடர்பு கொண்டால இருவருக்கும் வாய்ப்பான நேரம் தெரிவிக்கலாம்.
    அன்புடன்
    இலக்குவனார் திருவள்ளுவன்

    ReplyDelete
  6. @ Ilakkuvanar Thiruvalluvan
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. were to find the software and were to buy the device

    ReplyDelete

Post Top Ad