சரியாக என்றைக்கு வாழ்த்து செய்தி அவருக்கு கிடைக்க வேண்டும்
என்றும் வாழ்த்துச்செய்தி மட்டுமல்ல எல்லாவகையான
செய்திகளையும் டிவிட்டர் , எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம்
இப்போதே அனுப்பலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
[caption id="attachment_2257" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
வருகின்ற ஜூலை மாதம் நாம் வாழ்த்து செய்தி அனுப்பவேண்டும்
என்றால் இப்போதே அந்த வாழ்த்து செய்தியை அனுப்பலாம்
அந்த வாழ்த்துச்செய்தி நாம் குறிப்பிட்ட தேதியில் யாருக்கு
செல்ல வேண்டுமோ அந்த தேதியில் அவர் பெறுவார்கள்.
நாளை என்ற ஒன்று நிச்சயம் இல்லாத இந்த வாழ்க்கையில்
நாம் யாருக்கு வேண்டுமானாலும் எந்த செய்தி வேண்டுமானலும்
இப்போதே அனுப்பலாம்.
இணையதள முகவரி : http://www.futuremessage.org
[caption id="attachment_2258" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]
[caption id="attachment_2259" align="aligncenter" width="422" caption="படம் 3"][/caption]
இந்த இணையதளத்திற்க்கு சென்று படம் 1-ல் இருப்பது என்ன செய்தி
அனுப்ப வேண்டுமோ அதை தட்டச்சு செய்துகொள்ளவும் அடுத்து
Date என்பதை அழுத்தி படம் 2 இல் இருப்பது போல் எந்த தேதியில்
செய்தி கிடைக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து Text Message என்பதை சொடுக்கி படம் 3-ல் இருப்பது போல்
வாழ்த்து பெறுபவரின் போன் நம்பரை கொடுக்கவும்.
[caption id="attachment_2260" align="aligncenter" width="387" caption="படம் 4"][/caption]
அடுத்து Twitter Accout என்பதை சொடுக்கி படம் 4 -ல் இருப்பது
போல் நம் டிவிட்டரின் முகவரியையும் கடவுச்சொல்லையும்
கொடுக்கவும்.
[caption id="attachment_2261" align="aligncenter" width="423" caption="படம் 5"][/caption]
அடுத்து Email Information என்பதை சொடுக்கி படம் 5-ல் உள்ளது
போல் பெறுபவரின் இமெயில் முகவரியை கொடுத்து
" Send Message to the Future " என்ற பொத்தானை அழுத்தி நம்
நாளைய செய்தியை இப்போதே அனுப்பலாம்.
வின்மணி சிந்தனை
அன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும்
கொடுக்க முடியாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.’இரண்டாம் உலகப்போர்’ குறிப்புகள் என்ற நூலை
எழுதியவர் யார் ?
2.’நந்தி மலை’ எங்குள்ளது ?
3.காற்றின் வேகத்தை அளக்கும் கருவி ?
4.’நீலப்புரட்சி’ எதனோடு தொடர்புடையது ?
5.மரண தண்டனையை தடுக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு ?
6.’கொல்லி மலை’ எந்த மாவட்டத்தில் உள்ளது ?
7.இந்திய எல்லைக்கோட்டை உருவாக்கியவர் யார் ?
8.பழங்குடி ’நாகர்கள்’ எந்த இடத்தில் வசிக்கின்றனர் ?
9.விண்வெளிக்கலம் ஆரியப்பட்டா எங்கு தயாரிக்கப்பட்டது ?
10.’தான் சேன்’ என்பவர் எந்தத்துறையில் சிறந்தவர் ?
பதில்கள்:
1.சர்ச்சில், 2.மைசூர், 3.அனிமா மீட்டர்,
4.மீன்,5.ஜனாதிபதி, 6.நாமக்கல்,7.ஹேன்றி மக்மகான்,
8.நாகாலாந்து,9.தும்பா,10.இசை
இன்று ஜுன் 3
பெயர் : மு. கருணாநிதி ,
பிறந்த தேதி : ஜுன் 3, 1924
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும்
தற்போதைய தமிழக முதலமைச்சரும் ஆவார்.
1969ல் முதன் முறையாக தமிழக
முதலமைச்சரானார்.மே 13, 2006ல் ஐந்தாவது
முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.கருணாநிதி
தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு
கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர்.ராதா
'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே
அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Sometting usefull Winmani sir, thanks a lot
ReplyDelete@ charles
ReplyDeleteமிக்க நன்றி
அரிய விசயம்.
ReplyDeleteஉலகம் எங்கையோ போகுது!...
ஜெகதீஸ்வரன்.
@ ஜெகதீஸ்வரன்
ReplyDeleteமிக்க நன்றி
super boss
ReplyDelete@ sivakumar
ReplyDeleteமிக்க நன்றி