புகைப்படகாரர்களையும் அவர்களின் புத்தகங்களையும் கண்டுபிடிக்க எளிய வழி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, June 29, 2010

புகைப்படகாரர்களையும் அவர்களின் புத்தகங்களையும் கண்டுபிடிக்க எளிய வழி

அரியவகை புகைப்படங்கள் பலவற்றை பற்றியும் அதை
புகைப்படகாரர்கள் எடுத்த தொழில்நுட்ப டெக்னிக் பற்றியும்
அவர்களின் அனுபவங்களையும் பற்றியும் எளிதாக தெரிந்து
கொள்வது எப்படி என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.



அழகான புகைப்படங்கள் பற்றியும் அதைப்பற்றி உள்ள புத்தகங்கள்
பற்றியும் எளிதாக கண்டுபிடிக்க ஒரு இணையதளம் வந்துள்ளது
இந்த இணையதளத்திற்க்கு சென்று நமக்கு பிடித்த புகைப்படகாரர்களின்
பெயர் அல்லது அவர்களின் நாட்டின் பெயரைக்கொடுத்து தேடலாம்
நமக்கு உடனடியாக அவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் அந்த
புகைப்படகாரர்கள் எழுதிய புத்தகம் தேடுதல் முடிவில் காட்டப்படும்
பல இணையதளங்கள் இதற்க்காக இருந்தாலும் தேடுதலில்
எளிமையாகவும் அதிக புகைப்படகாரர்களையும் கொண்டு இணைய
உலகில் மிகப்பெரிய மரமாக வளர்ந்து வருகிறது. கண்டிப்பாக
இந்த இணையதளம் புகைப்படகாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



இணையதள முகவரி : http://snapm.com
வின்மணி சிந்தனை
தனக்கு கிடைக்கும் காலத்தை மக்கள் நலனுக்காக சரியாக
பயன்படுத்தாத அரசியல்வாதி பயனற்ற பிறவியாவான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இயற்கையான புயல் உருவாகக் காரணம் என்ன ?
2.இந்தியாவில் அமாவாசையாக இருந்தால் அமெரிக்காவில்
எவ்வாறு இருக்கும் ?
3.ஆண்,பெண் இருபாலரின் மூளையின் அளவில் வேறுபாடு
 உண்டா?
4.வைரம் ஜொலிப்பதற்க்கு முக்கிய காரணம் என்ன ?
5.ஒளி ஆண்டு ( Light Year ) என்பது என்ன ?
6.சிலபேருக்கு மட்டும் இடதுகை பழக்கம் இயற்கையாக
ஏற்படக் காரணம் என்ன ?
7.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் ?
8.யோகா என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு என்ன பொருள்?
9.சீனா முதன் முதலில் எப்போது ஒலிம்பிக் விளையாட்டில்
கலந்து கொண்டது ?
10.இடி மின்னல் நாடு என்று எந்த நாட்டை குறிப்பிடுகின்றனர்?

பதில்கள்:
1.குளிர்ந்தகாற்றும் வெப்பகாற்றும் சந்திப்பதால்,2.பெளர்ணமியாக
இருக்கும்,3.ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட
பெரியது, 4.ஊடுறிவிச்செல்லும் ஒளி பிரதிபலிக்கவும் செய்யும்,
5.வெளிச்சக்கதிர்கள் 1ஆண்டு காலத்தில் பயணப்படும் வேகத்தை
குறிப்பது,6.மூளையில் வலது பக்கம் அதிக சக்தியை
பெற்றிருப்பதால்,7.தாரா செரியன் 1957- சென்னை,8.ஒழுக்கம்,
9.1984-ல்,10.பூட்டான்.

இன்று ஜூன் 28 
பெயர் : பி. வி. நரசிம்ம ராவ் ,
பிறந்த தேதி : ஜூன் 28, 1921

இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக
பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த
இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்
உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல்
இந்தியப் பிரதமர் இவரே. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான
ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில்
பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப்பிரதேச
மாநிலத்தின் முதல்வராகவும்பதவி வகித்தார்.


PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

  1. வெங்கடாச்சலம் தோத்தாத்ரிJune 29, 2010 at 1:20 PM

    2.இந்தியாவில் அமாவாசையாக இருந்தால் அமெரிக்காவில்
    எவ்வாறு இருக்கும் ?
    (பௌர்ணமியாக)
    சரியான பதில் அன்று. தவறானது. உங்களுடைய சரியான பதில் வேண்டுகிறேன்.
    பன்னீரண்டரை மணி நேரம் பிந்தி அமாவாசையாகவே அமெரிக்காவில் இருக்கும்.



    அன்புடன்
    வெ.சுப்பிரமணியன் ஓம்

    ReplyDelete
  2. நண்பருக்கு ,
    இதற்க்கான பதில் சரிதான். உங்களுக்காக மேலும் ஒரு முறை பதிலை சரிபார்க்கிறோம்.
    இந்த சம்ன்பாட்டை பற்றி தெரிந்தால் மேலும் வசதியாக இருக்கும்.

    d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10-12) x N2

    ReplyDelete
  3. யோகம் என்றால் இணைப்பு, சேர்க்கை
    ‘யுஜ்’ என்னும் வேரிலிருந்து

    ‘ஒழுக்கம்’ என்பது தவறு

    தேவ்

    ReplyDelete
  4. @ devarajan on
    நண்பருக்கு சற்று விரிவாக சொல்லலாமா ?
    அடுத்து நாம் இங்கே சொல்லி இருப்பது யோகம் அல்ல யோகா.
    நன்றி

    ReplyDelete

Post Top Ad