ஐபோன்4 வெளிவரும் தேதி மற்றும் விலை ஸ்பெஷல் ரிப்போர்ட் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, June 7, 2010

ஐபோன்4 வெளிவரும் தேதி மற்றும் விலை ஸ்பெஷல் ரிப்போர்ட்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்4 வெளிவரும் தேதி மற்றும்
அதன் விலைப்பட்டியலை நேற்று நடைபெற்ற வேர்ல்ட்வைடு
டெவலப்பர் கான்பிரன்ஸ் ( Worldwide Developer’s Conference
- WWDC) கூட்டதில் அறிவிக்கப்பட்டுள்ளது இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 4 எப்போது வெளிவரும் என்ற
செய்தியை நாம் எதிர்பார்த்து காத்திருந்தோம் இந்த நிலையில்
நேற்று நேற்று நடைபெற்ற வேர்ல்ட்வைடு டெவலப்பர்
கான்பிரன்ஸ் கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் CEO ஸ்டிவ்
ஜாப்ஸ் அவர்கள் ஐபோன் 4 வெளிவரும் தேதியை அறிவித்தார்
இதன்படி அமெரிக்கா , இலண்டன் , பிரான்ஸ்,ஜெர்மனி, மற்றும்
ஜப்பான் நாடுகளில் வரும் ஜூலை மாதம் 24 ம் தேதி
வெளிவருகிறது. மற்ற 88 நாடுகளிலும் செப்டம்பர் மாதம்
ஐபோன்4 வெளிவரும் என்றும் அறிவித்துள்ளனர். முதலில்
வெளிவந்த ஐபோனில் வாடிக்கையாளர்கள் விரும்பிய அனைத்து
அம்சங்களும் இதில் இருக்கும் என்றும் இதற்கான முன் பதிவு
இந்த மாதம் ஜூன் 15 ம் தேதி முதல் தொடங்குகிறது.
16 GB மெமரி கொண்ட ஐபோன்4 -ன் விலை $199 டாலர்,
32 GB மெமரி கொண்ட ஐபோன்4 -ன் விலை $299 டாலர்
ஆகும்.
வின்மணி சிந்தனை
பொது இடங்களில் நின்று கொண்டு குடும்ப பிரச்சினை
பற்றி பேசுவதும் மனைவி அல்லது குழந்தையை
திட்டுபவனும் கல்வி அறிவு இல்லாத மூடன்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியாவில் மிக பழமையான பொது அஞ்சலகம் எங்குள்ளது?
2.வைட்டமின் உலோகம் எனப்படுவது எது ?
3.பறவைகளை பற்றிய அறிவியல் பிரிவு எது ?
4.திரிபுராவின் தலைநகரம் எது ?
5.எந்த நாளை உலக எய்ட்ஸ் தினமாக கொண்டாடுகிறோம்?
6.இந்தியாவின் முதல் துணைப்பிரதமராக பதவி வகித்தவர் யார்?
7.ஐ.ஜீ.கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட விருது எது ?
8.தண்ணிரை விட லேசான உலோகம் எது ?
9.நெம்புகோல் தத்துவத்தை கண்டுபிடித்தவர் யார்?
10.கோபால்ட் உலோகம் தீர்க்கும் நோய் எது ?

பதில்கள்:
1.சென்னை, 2.வனாடியம், 3.ஆர்ட்னிதாலஜி, 4.அகர்தலா,
5.டிசம்பர் 1, 6.சர்தார் வல்லபாய் படேல்,7.ராமன் மகசேசே,
8.லித்தியம், 9.ஆர்க்மெடிஸ்,10.இரத்த சோகை

இன்று ஜுன் 7 
பெயர் : மகேஷ் பூபதி ,
பிறந்த தேதி : ஜூன் 7 , 1974

இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை
டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர்
சென்னையில் பிறந்தவர்.1995ம் ஆண்டிலிருந்து
தொழில்முறையில் ஆடி வருகிறார். தற்போது
இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த
இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

 1. Dear sir,

  I am reading all of your blog news, all r nice and informative., please continue your service.

  Today i read ur blog news about new Apple Iphone-4.

  The price was mentioned in Apple website is 199$ for 16gb.

  Its very low price, how it is possible, because Apple 3g is cost

  around 799$.

  My doubt is can we buy this apple iphone 4 from other country and use in india?

  kindly reply

  ReplyDelete
 2. @ prabhu
  பயன்படுத்தும்படியாக இருக்கும்.
  மிக்க நன்றி

  ReplyDelete
 3. Hi,
  @prabhu
  The price 199$ means, u need to have 2 yrs contract with AT&T (Mobile service Provider, like Airtel, Aircel in India) in USA. If you break the contract u have to pay some amount (i donno the exact amount).. and we cannot use the same iPhone (from USA) in India. because it may be locked.

  If you want to use iPhone in India, u need to buy Unlocked version of iPhone.

  Hope you got the answer.. :)

  ReplyDelete
 4. @ Senthil
  மிக்க நன்றி ,
  எல்லாம் விரைவில் சரியாக தெரிந்து விடும்l

  ReplyDelete
 5. இரவுப் பறவைJune 8, 2010 at 10:06 PM

  Winmani

  I think it is getting released on June 24th 10'. Please check.....

  ReplyDelete
 6. @ இரவுப் பறவை
  முன்பதிவு மே 24 ஆம் தேதி , வெளிவரும் தேதி ஜூலை மாதம் 15ம் தேதிக்கு பின் 24-ல் வெளிவரும் என்று தான் தகவல்கள் தெரிகிறது.

  ReplyDelete

Post Top Ad