பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, May 6, 2010

பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்

பழுதான CD அல்லது DVD -ல் இருந்த முக்கியமான தகவல்களை
எப்படி மீட்கலாம் என்பதைப்பற்றிதான இந்தப்பதிவு.

[caption id="attachment_1937" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

சவுதியில் இருந்து தோழி மீனா பழுதாகியுள்ள DVD -யில் இருந்து
தகவல்களை எப்படி மீட்கலாம் என்பது பற்றி கேட்டிருந்தார்.
பழுதாகியுள்ள CD அல்லது DVD-யில் இருந்து தகவல்களை மீட்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை இங்குள்ள
தளமுகவரியை சொடுக்கி தரவிரக்கிக்கொள்ளலாம்.

http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe

[caption id="attachment_1938" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

[caption id="attachment_1939" align="aligncenter" width="450" caption="படம் 3"][/caption]

[caption id="attachment_1940" align="aligncenter" width="450" caption="படம் 4"][/caption]

இந்த மென்பொருளை நம் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்
உங்கள் DVD டிரைவில் பழுதான DVD - ஐ இட்டு இந்த மென்பொருளை
இயக்கியதும் படம் 1-ல் இருப்பதுபோல் வரும் அடுத்து Next என்ற
பொத்தனை அழுத்தியவுடன் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்
இதில் நாம் DVD-உள்ள தகவல்களை நம் கணினியில் எங்கு சேமிக்க
வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Next என்ற பொத்தானை
அழுத்தவும் இப்போது படம் 3-ல் காட்டியபடி உங்கள் DVD -ல் உள்ள
எந்தெந்த தகவல்களை சேமிக்க வேண்டுமோ அதை எல்லாம்
தனித்தனியாகவோ அல்லது  மொத்தமாகவோ தேந்தெடுத்துக்கொண்டு
Next என்ற பொத்தனை அழுத்தியவுடன் சிறிது நேரத்தில் நம் அனைத்து
தகவல்களும் பழுதான DVD -ல் இருந்து நம் கணியில் சேமிக்கப்பட்டு
விட்டது என்ற செய்தி படம் 4 உள்ளவாறு வரும்.
வின்மணி சிந்தனை
சரியாக ஆங்கிலம் பேசத்தெரியாமல் வங்கியில் கல்வி கடன்
வாங்க வரும் மாணவரிடம் தமிழே தெரியாதது போல்
ஆங்கிலத்திலே பேசி கடன் கொடுக்காமல் இருக்கும் அதிகாரி
நம் தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கும் துரோகி.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.டைபர் நதி எந்த நகரத்தில் பாய்கிறது ?
2.இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் எங்குள்ளது ?
3.பிளாட்டினம் எங்கு கிடைக்கிறது ?
4.முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது ?
5.திருவருட்பா யாரால் இயற்றப்பட்டது ?
6.க்யூரி தம்பதி கண்டுபிடித்த தனிமம் எது ?
7.கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்
இந்தியாவில் எங்கு முதலில் தொடங்கப்பட்டது ?
8.காந்தி பிறந்த இடம் ?
9.யூத மதத்தை தோற்றுவித்தவர் யார் ?
10.உலகிலே அதிகமாக துத்தநாகம் கிடைக்கும் இடம் எது?

பதில்கள்:
1.ரோம்,2.புதுடில்லி, 3. ரஷ்யா , கனடா,4.மீன்
5.வள்ளலார்,6.ரேடியம்,7.லட்சத்தீவு,
8. குஜராத்தில் உள்ள போர்பந்தர்,9.மோசஸ்,10.சிலி

இன்று மே 6 
பெயர் :  டோனி பிளேர்,,
பிறந்த தேதி :  மே 6, 1953

ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர்.
1994ல் ஜான் ஸ்மித்தின் இறப்பிற்குப் பிறகு
தொழிற் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி
1997ல் நடந்த பொதுத் தேர்தல்களில் ஜான்
மேஜரைத்  தோற்கடித்து தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித்
தந்தார். அன்று முதல், தொடர்ந்து மூன்று முறை
பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். தொழிற் கட்சித்
தலைவர்களிலேயே அதிக காலம் பிரதமாரகப் பொறுப்பு
வகிப்பவரும் இவர் தான்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

17 comments:

 1. jeorge robert kennedyMay 6, 2010 at 12:47 PM

  pazudhana cd, dvd parti ezudhi erundinga, migavum arumai aanaal pazuthana hord drive-il erunthu eppadi data eduppathu enpadhai ezudhineergal endral migavum nandraga erukkum, ennai pondravargalukku, ungalin sevai thodara en vaazthukkal,mikka nandri vanakkam.

  ReplyDelete
 2. அன்புள்ள விண்மணி அவர்களுக்கு,
  நான் சமிபத்தில் தான் உங்கள் வலைதளத்தை கண்டேன்.எளிமையாக எழுதி உள்ளீர்கள்.பயனுள்ள வலைத்தளம்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அருமையான தகவல்களுடன் மென்பொருட்களையும் தரும் வின்மனிக்கு நன்றி

  சுந்தர், H.K.Jordan.

  ReplyDelete
 4. சார் இந்த மென்பொருளும் அற்புதமா எப்படி பட்ட CD DVDஇல் இருந்து கோப்புகளை மீட்டுவிடும் ...
  BAD CD DVD READER....

  ReplyDelete
 5. @ chutti
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. @ anandhavarun
  நாம் சில நேரங்களில் பழுதான CD அல்லது DVD -ஐ டிரைவினுள் செலுத்தியதும் கணினியில் எந்த செயலுக்கும் துனை
  புரியாமல் idle ஆக இருக்கும் அப்போது நாம் இந்த மென்பொருளை பயன்படுத்தி பாதுகாப்பாக தகவல்களை மீட்கலாம்.
  நன்றி

  ReplyDelete
 7. @ Sundar
  மிக்க நன்றி

  ReplyDelete
 8. @ புதுவை சிவா
  மிக்க நன்றி

  ReplyDelete
 9. @ jeorge robert kennedy
  நன்றி, விரைவில் தெரியப்படுத்துகிறோம்.

  ReplyDelete
 10. thank u very much
  meena

  ReplyDelete
 11. @ மீனா
  மிக்க நன்றி

  ReplyDelete
 12. Arputhamaaga irukkirathu nanbargale...Ungalin Winmani...!! Vaazthukkal!!! tnx!!

  ReplyDelete
 13. Winmani is the very best for all pepole photoshop tools explain please sir

  ReplyDelete
 14. @ Manikandan
  ஏற்கனவே இருக்கிறது , எதற்கும் விரைவில் இன்னொருமுறை
  தெரியப்படுத்துகிறோம்.
  நன்றி

  ReplyDelete
 15. வணக்கம்,வின்மணி வலைப்பதிவில் வின்மணின் சிந்தனை மிகவும் அருமை,தொடரட்டும் உங்கள் சிந்தனை
  நன்றி.

  ReplyDelete
 16. தங்கள் இணையதளம் மிகவும் பயனுள்ளதான தகவல்களை பதிவு செய்து வருகிறது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post Top Ad