அமெரிக்காவில் கூகுளை முந்தியது பேஸ்புக் ஸ்பெஷல் ரிப்போர்ட் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, April 27, 2010

அமெரிக்காவில் கூகுளை முந்தியது பேஸ்புக் ஸ்பெஷல் ரிப்போர்ட்

அமெரிக்கவில் அதிகமான பேர் பார்க்கும் முதல் இணையதளமாக
இருந்த கூகுளை பேஸ்புக் இணையதளம் பின்னுக்கு தள்ளி முதல்
இடம் பிடித்துள்ளது இதைப்பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்.



எதற்க்கு என்றாலும் கூகுள் தான் என்று ஆகிவிட்ட இந்த நிலையில்
கூகுளின் முதலிடத்தை சற்று அசைத்து பார்த்திருக்கிறது பேஸ்புக்.
அதிகமான பேர் திரும்ப திரும்ப பயன்படுத்தும் இணையதளமாக
பேஸ்புக் முதல் இடத்தில் வந்துள்ளது. தொடமுடியாத இடத்தில்
இருந்த கூகுள் முதன் முறையாக இப்போது தான் இரண்டாவது
இடத்திற்க்கு வந்துள்ளது. சமீபத்தில் தான் நம் சங்கத்தலைவர்
பில்கேட்ஸ் பேஸ்புக் -உடன் டாக்ஸ்-ல் இணைந்தார் என்ற
செய்தியை வெளியீட்டு இருந்தோம் ஏன் பேஸ்புக்-ல் மைக்ரோசாப்ட்
டாக்ஸ்-ஐ இணைந்தார் என்று புரியாத புதிராக இருந்த நமக்கு
இப்போது தான் உண்மை தெரிந்திருக்கிறது. (சோலையன் குடுமி
சும்மா ஆடுமா ) ஆனாலும் இது நிரந்தரமில்லை என்று தான்
தோன்றுகிறது. கூகுள் கொடுக்கும் சேவையில் ஒன்றை கூட்டினால்
கூட அவர்கள் முதலிடத்தை மட்டுமல்ல யாரும் நெருங்ககூட முடியாத
இடத்தை பிடிப்பார்கள் என்பது நம் நோக்கம்
வின்மணி சிந்தனை
தன் சுயலாபத்துக்காக மக்களை அடிமையாக நடத்தும்
அரசியல்வாதிகள்,அதிகாரிகளின் வாழ்நாள் இறுதி காலம் மிக மிக
மோசமாக இருக்கும் தண்ணீர் கொடுக்க கூட யாரும்
வரமாட்டார்கள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியாவுடன் இணைந்த 22 வது மாநிலம் எது ?
2.தமிழ் நாட்டில் முதலில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட ஊர் எது ?
3.மன்னர் அதியமான் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் எது ?
4.பல்கலைக்கழகங்களின் வேந்தர் யார் ?   
5.பிரான்ஸ் நாட்டு அதிபரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
6.இந்தியாவில் அதிக பிரதிகள் எடுக்கப்பட்ட முதல்
திரைப்படம் எது ?   
7.கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படும் மரம் எது ?
8.இலங்கையின் தேசிய விளையாட்டு எது ?
9.கோகோ விளையாட்டின் தாயகம் எது ?
10.எரிமலையே இல்லாத கண்டம் எது ?

பதில்கள்:
1. சிக்கிம்,2. தரங்கம்பாடி, 3.தர்மபுரி, 4.கவர்னர் ,
5.ஏழு ஆண்டுகள்,6.சந்திரலேகா,7. வில்லோ மரம்,
8. ரக்பி,9. இந்தியா, 10.ஆஸ்திரேலியா

இன்று ஏப்ரல் 27 
பெயர் : வலேரி பொல்யாக்கொவ்
பிறந்த தேதி : ஏப்ரல் 27, 1942

ஒரு ரஷ்ய விண்வெளி வீரர ஆவார்.
மனித விண்வெளி வரலாற்றில் இவரே
அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர்
மீர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளிவீரராக
14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில்
14 மாதங்களுக்கு மேலாக விண்ணில் காலம்
கழித்து சாதனை புரிந்தார். இவரது மொத்த
விண்வெளிக் காலம் 22 மாதங்களாகும்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. Nalla matter......New social network link & join with this one

    It is a new Social site that combines *Facebook, Twitter, Youtube,Myspace, Linked-in and more...All on one page


    It is Free to Join with an Option to Upgrade to Gold Member for$10/Mo. You Earn Residual......Join with this link http://Join.YourNight.com/srdhrn

    ReplyDelete
  3. anpulla winmani sir eanathu computerin desktop black colouraaha maari vittathu.(you may be a victim of microsoft geniune....)eannum message desktopin right sideil varukirathu eanna seiyalam pls tell me

    ReplyDelete
  4. really usefully...

    ReplyDelete
  5. @ Ahmad izzath
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad