அழகுபடுத்த மட்டுமல்ல. நாம் விரும்பும் வண்ணம் புது புகைப்படம்
உருவாக்கவும் தான். போட்டாஷாப்பில் பல துனை கருவிகள்
இருந்தாலும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய பிரஸ் டூல் -ஐ
எளிதாக எங்கிருந்து எளிதாக எப்படி தரவிரக்கலாம் என்பதைப்பற்றித்
தான் இந்த பதிவு.
வால்பேப்பர் உருவாக்குவதில் இருந்து இருக்கும் படத்திற்கு பறவைகள்,
மேகம், புல் வெளி என அனைத்தையும் சேர்த்து மேலும் மேலும்
அழகுட்டத்தான் போட்டோஷாப்-ன் இந்த பிரஷ் டூல் நமக்கு அதிகமாக
பயன்படுகிறது. இப்படி பல வித வேலைகளை எளிதாக்கும் இந்த பிரஷ்
டூல்-ஐ தரவிரக்க பல இணையதளங்கள் இருந்தாலும் மிக அறியவகை
பல பிரஷ்களை தன் இணையதளத்தின் மூலம் தேடி கொடுக்க ஒரு
இணையதளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://findbrushes.com
முகப்புபக்கம் பார்ப்பதற்கு கூகுல் போல் எளிமையாகவே இருக்கிறது.
இந்த தளத்திற்க்கு சென்று நாம் எந்த மாதிரி பிரஷ் வேண்டுமோ அதன்
பெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சில நொடிகளில் முடிவுகள்
கொடுக்கும் நமக்கு பிடித்த டூல் -ஐ தரவிரக்கிக்கொள்ளலாம். வகைகள்
என்ற பிரிவில் பல வகையான டூல் களை தனித்தனியாக குரூப் செய்தும்
வைத்துள்ளனர் இதற்கு Categories என்ற மெனுவை அழுத்தி நாம்
விரும்பும் வகையில் உள்ள டூல்-ஐயும் தரவிரக்கலாம்.
போட்டோஷாப்-ல் நாம் உருவாக்கும் பிரஷ் -ஐயும் இங்கு சமர்பிக்கலாம்.
வின்மணி இன்றைய சிந்தனை
மேலைநாட்டு கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் அணியும்
அரை குறை ஆடையை அவர்களின் பெற்றோர்கள் நேரடியாக
கண்டித்து திருத்த வேண்டும். நம் பெண்கள் முழுமையான
ஆடைகள் அணிவதால் மரியாதை கிடைக்காவிட்டாலும்,
பாரதத்தாயின் மகளாக பாதுகாப்பாக இருக்கலாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. பாஸ்பரஸ் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது ?
2. சூரியனின் உட்பகுதிக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன ?
3. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எது ?
4. இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன் முதலாக நியமிக்கப்பட்ட
வெளிநாட்டு பயிற்ச்சியாளர் யார் ?
5. மிக நீளமான இரயில்வே பாலம் எது ?
6. இந்தியாவில் பாலிவுட் எனப்படும் நகரம் எது ?
7. பாடல்கள் இல்லாத முதல் தமிழ்ப்படம் எது ?
8. வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி எது ?
9. மிகப்பெரிய நீர்ப்பறவை எது ?
10. கிரேக்கத்தின் புகழ் பெற்ற கணிதவியலாளர் யார் ?
பதில்கள்
1.நீருக்கடியில்2.தெர்மோஸ்பியர்3.காங்கிரஸ் நூலகம் அமெரிக்கா
4.ஜான்ரைட், 5.சோனி பாலம், 6.மும்பை, 7.அந்த நாள் ,
8.கோக்ஸ் பூச்சி, 9.அன்னம்,10.பித்தாகரஸ்
இன்று ஏப்ரல் 10
பெயர் : மொரார்ஜி தேசாய் ,
மறைந்த தேதி : ஏப்ரல் 10, 1995
இந்திய விடுதலைப்போராட்ட வீரரும்,
இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும்
ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி
சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய
குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரதரத்னா
-வையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய
விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
நட்பும் தோழமையும் தவிர்த்து, வேறென்ன வேண்டும் வாழ்வில் நல்ல பதிவு நண்பா தோழமையுடன் ....
ReplyDelete@ jkr நன்றி
ReplyDeleteதங்களது ஒவ்வொரு இடுகையும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.
ReplyDelete@ vijay நன்றி
ReplyDeleteuseful post thanks winmani
ReplyDeleteverry good comment the tamilmani valka
ReplyDelete@ sutha நன்றி
ReplyDelete@ puduvaisiva நன்றி
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDelete@ priyamudan pirabu நன்றி
ReplyDeleteதங்களின் அனைத்து பதிவுகளும் பயனுள்ளவை.உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துக்கள்.நன்றி
ReplyDelete@ rifa நன்றி
ReplyDeleteஅருமையான பதிவுகளுக்கு - சபாஷ்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
நட்புடன் - மஸாகி
24.04.2010
@ மஸாகி நன்றி
ReplyDeleteநல்ல தமிழ் தளம் மிக்க நன்றி
ReplyDelete@ sathish
ReplyDeleteமிக்க நன்றி