சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, April 1, 2010

சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம்.

சுருக்கப்பட்ட இணையதள முகவரி பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு
வருகிறது அதிகமாக டிவிட்டரில் தான் அனைத்து பயனாளர்களும்
இந்த சுருக்கப்பட்ட யூஆரெல் முகவரியை பயன்படுத்துகின்றனர். இது
ஒரு வகையில் பார்த்தால் நன்மை தான் என்றாலும் பல வகைகளில்
வைரஸ் மற்றும் ஆபாச இணையதளங்களின் முகவரியை சுருக்கி
அனுப்புவதால் வைரஸ் எளிதாக நம் கணினியை தாக்குகிறது.
இப்படி சுருக்கப்பட்ட முகவரியை நாம் சொடுக்காமல் எப்படி இதன்
உண்மையான இணையதள முகவரியை கண்டுபிடிக்கலாம்
என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.

[caption id="attachment_1478" align="aligncenter" width="436" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_1479" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

நாளுக்கு நாள் இணையதள முகவரியை சுருக்க பல இணையதளங்கள்
வந்து கொண்டிருந்தாலும் அத்தனை தளத்தையும் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.  பிட் யூஆரெல்
மற்றும் பல தளங்கள் இணையதளங்களை சுருக்கும் சேவையை
வழங்கினாலும் இன்னும் நாம் சொடுக்கிய யூஆரெல் முகவரி எந்த
தளத்திற்க்கு செல்லும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்து
கொண்டுதான் இருக்கிறது.  குழந்தைகள் ஆர்வத்தில் தகவல்
என்னவென்று அறிய இந்த முகவரியை சொடுக்கவும் என்று
இருக்கும் இடத்தில் உள்ள சுருக்கப்பட்ட முகவரியை சொடுக்கி தங்கள்
கணினியில் வைரஸ் வர வைத்துவிடுகின்றனர். இந்த பிரச்சினை
-யிலிருந்து நம்மை மீட்க ஒரு இணையதளம் வந்துள்ளது இந்த
இணையதளத்திற்கு சென்று நாம் சுருக்கப்பட்ட இணையதள
முகவரியை கொடுத்தால் அதன் மூலம் அதாவது உண்மையான
இணையதள முகவரியை நமக்கு கொடுக்கும். உதாரணமாக நாம்
http://bit.ly/b6CJ9n என்ற சுருக்கப்பட்ட முகவரியை கொடுத்து
சோதித்து பார்த்தோம் சரியாக கொடுத்தது.

இணையதள முகவரி :  http://www.unshortn.com

இந்த தளத்திற்கு சென்று படம் 1- ல் காட்டப்பட்டது போல் சுருக்கப்பட்ட
இணையதள முகவரியை கொடுத்து Make Longer என்ற பொத்தானை
அழுத்தவும்.இப்போது அதன் உண்மையான முகவரியும் அதன்
தலைப்பும் நமக்கு கொடுக்கப்பட்டுவிடும் படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது.
சுருக்கப்பட்ட இணையதள முகவரியை விரித்துப்பார்க்க இந்த தளம்
உதவும்.  இதே போல் விரிக்கப்பட்ட முகவரியை சுருக்க உதவும்
இணையதளத்தைப்பற்றிய நம் பழைய பதிவை பார்க்க இங்கே
சொடுக்கவும்.  நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய
இணையதளம் புதிய சேவைகளுடன்
.
வின்மணி இன்றைய சிந்தனை
பதிவுகளைத் திருடி பணத்துக்காக விற்கும் நபர் தன்னுடைய
குடும்பத்தையும் ஒரு நாள் விற்க நேரலாம். உண்மைத் தமிழருக்கு
புதிய பதிவை உருவாக்கத்தெரியுமே தவிர திருடத்தெரியாது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
2. உலக வாணிப நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
3. இந்தியாவின் இரட்டை நகரம் எது ?  
4. தபால் தலையை வட்டவடிவாக வெளியிட்ட நாடு எது ?
5. கவிஞர் ரவீந்திரநாத் நடித்த சினிமா எது ?
6. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி எது ?
7. சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தவர் யார் ?
8. ரேடியாவில் பயன்படுத்தப்படும் மின்தடை எதனால் ஆனது ?
9. மிக அறிவு கூர்ந்த பறவை எது ?
10.மூளையில் உள்ள நீயுரான்களின் எண்ணிக்கை யாது ?

பதில்கள்:
1.ஜீவி.மாவ்லங்கர், 2.ஜெனிவா,3.ஹைதராபாத்,செகந்திராபாத்,
4.மலேசியா,5.வால்மீகி பிரதிமா,6.புழலேரி,7.பேடன் பவல் ,
8.கிராபைட்டால் ஆனது,  9.ப்லூடிட் , 10. 1400

இன்று ஏப்ரல் 1
பெயர் : தி.வே.கோபாலையர் ,
மறைந்த தேதி : ஏப்ரல் 1, 2007

பதிப்பாசிரியராக, உரையாசிரியராக,
சொற்பொழிவாளராக, பேராசிரியராக மிளிர்ந்த
தமிழறிஞர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்
பட்டவர்.தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம்,
ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம்,
இலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ
இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. //வின்மணி இன்றைய சிந்தனை
    பதிவுகளைத் திருடி பணத்துக்காக விற்கும் நபர் தன்னுடைய
    குடும்பத்தையும் ஒரு நாள் விற்க நேரலாம். உண்மைத் தமிழருக்கு
    புதிய பதிவை உருவாக்கத்தெரியுமே தவிர திருடத்தெரியாது.//

    Great thoughts.

    ReplyDelete
  2. @ shirdi.saidasan நன்றி

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல், பாவிகள் என்னென்ன யுக்திகளை கையாலனுமோ அத்தனையையும் கையாளுகின்றனர், நாமளும் உசாராக இருக்க வேண்டுமப்பா.
    ரொம்ப தேங்க்ஸ்

    ReplyDelete
  4. தொடர்ந்து தொடர்களைத் தந்து கொண்டிருக்கும் விண்மணி க்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post Top Ad