ஆன்லைன் மூலம் ஆடியோ பாடலை MP3 ஆக மாற்றலாம்,பாடலின் தரத்தை கூட்டலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, March 30, 2010

ஆன்லைன் மூலம் ஆடியோ பாடலை MP3 ஆக மாற்றலாம்,பாடலின் தரத்தை கூட்டலாம்.

ஆடியோ பாடலை கணினியில் MP3 ஆக மாற்றி சேமித்துவைத்துக்
கொள்ள என்ன தான் பல மென்பொருள்கள் வந்தாலும் அனைத்தையும்
தாண்டி நாம் எங்கு சென்றாலும் ஆடியோ பாடலை MP3 ஆக மாற்ற
வேண்டிய மென்பொருளை எடுத்துச்செல்லவேண்டியதில்லை
உடனடியாக அதுவும் ஆன்லைன் மூலம் ஆடியோ பாடலை MP3, MP4
மற்றும் பல பார்மட்டுகளில் மாற்றலாம் இலவசமாக இதைப்பற்றித்
தான் இந்த பதிவு.

[caption id="attachment_1456" align="aligncenter" width="370" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_1457" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

மொபைல் போனிலிருந்து ஐபாட் வரை அனைத்தும் ஒவ்வொரு
பார்மட்டில் சிறப்பாக இயங்கும். ஐபோனில் MP3 கேட்கலாம் என்றாலும்
WMV பார்மட்டுக்கு மாற்றி கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் இதே
போல் தான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பார்மட் சிறப்பாக இருக்கும்.
இதற்காக நாம் செல்லும் இடம் எல்லாம் ஆடியோ மாற்றும்
மென்பொருளை எடுத்துச்செல்ல வேண்டாம் ஆன்லைன் மூலம் சில
நிமிடங்களில் நாம் விரும்பும் பார்மட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இணையதள முகவரி :  http://media.io

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Choose
என்ற பொத்தானை அழுத்தி மாற்ற வேண்டிய பாடலை தேர்ந்தெடுத்து
Upload என்ற பொத்தானை அழுத்தவும். இப்போது நாம் மாற்ற
வேண்டிய பாடல் படம் 2-ல் காட்டியவாறு தோன்றும் என்ன
பார்மட்டுக்கு நாம் மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும்
அடுத்து பாடலின் தரத்தை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து
முடித்ததும் Convert என்ற பட்டனை அழுத்தி விரும்பிய பார்மட்டில்
மாற்றி நம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.
வின்மணி இன்றைய சிந்தனை
மக்களுக்கு சேவை செய்யும் அரசு அதிகாரி கடமையுடன்
அன்பும் சேர்த்து வேலை செய்தால் மக்களின் அன்பை மட்டுமல்ல
கடவுளின் ஆசியையும் கோவிலுக்கு செல்லாமலே பெறலாம்.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP Filters

FILTER_VALIDATE_FLOAT    Validate value as float.
FILTER_VALIDATE_REGEXP   Validate value against regexp,
 a Perl compatible regular expression
.
FILTER_VALIDATE_URL   Validate value as URL, optionally
with  required components
.
FILTER_VALIDATE_EMAIL    Validate value as e-mail.

இன்று மார்ச் 30 
பெயர் :ஆனந்த ரங்கம் ,
பிறந்த தேதி : மார்ச் 30,1709

முதல் தமிழ் நாட்குறிப்பு எழுதியவர்.தமிழ்
இலக்கியத்தில் புதுப்பொழிவை தந்தவர்.
24ஆண்டுகள் அவர் எழுதிய தமிழ்
நாட்குறிப்புகள் அவர் மறைந்து 85ஆண்டுகள்
கழித்து தான் நமக்கு கிடைத்தன. உங்கள் தமிழ்
சேவைக்கு என்றும் எங்கள் நன்றி.

1 comment:

  1. super I have used this for my files

    ReplyDelete

Post Top Ad