தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, March 11, 2010

தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மூலம் நேரடியாக பார்க்கலாம்.

கூகுள்-ன் வளர்ச்சியைப்பற்றி தினமும் ஒரு பதிவு இட்டுக்கொண்டே
தான் இருக்க வேண்டும் போல அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தில்
தனக்கென்று தனி இடத்தை பிடித்து யாரும் அருகில் கூட செல்ல
முடியாதபடி இருக்கிறது இப்படிபட்ட கூகுள் தற்போது ஹாங்காங்
நாட்டில் தெருவில் நடப்பவர்களை கூட கூகுள் மேப்-ல் பார்க்கலாம்
என்ற சோதனையை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளது இதைப்பற்றி
தான் இந்த பதிவு.





கூகுள் மேப்-ல் அனுமதிக்கப்பட்ட எல்லா இடத்தையும் பார்க்கலாம்
என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் இப்போது “ லைவ் “
ஸ்ட்ரிட் வீயூ லைவ் ( Street View Live ) அதாவது தெருவில்
நடந்து செல்லும் ஒருவரின் நடவடிக்கைகளை கூட எளிதாக நாம்
பார்க்கலாம் அந்த நபர் இப்போது எந்த திசையில் சென்று
கொண்டிருக்கிறார் என்று கூட பார்க்காலம் அவர் நடக்கும் ஒவ்வொரு
அடிக்கும் இங்கு கூகுள் மேப்-லும் மாற்றம் தெரிகிறது.
சோதனைக்காக முதலில் ஹாங்காங் நாட்டின் தெருவில் நடப்பவற்றை
நேரடியாக கூகுள் மேப்-ல் காட்டி லைவ் ஸ்ரிட் வீயூ என்பதிலும்
வெற்றி பெற்றிருக்கின்றனர்.வெளிநாட்டு குழந்தைகள் தெருவில்
செல்லும்  ஒவ்வொரு பாதையையும் இனி  இந்த கூகுள் லைவ்
மூலம் எளிதாக கண்கணிக்கலாம். திருடர்களும் தெருவில் எந்த
இடத்தில் இருக்கின்றனர் எங்கெல்லாம் செல்கின்றனர் என்று சாதாரண
மக்களும் எளிதாக கூகுள் மேப் மூலம் கண்டுபிடிக்கலாம். விரைவில்
அனைத்து நாட்டு தெருக்களையும் இனி நேரடியாக கூகுள் லைவ் மேப்
மூலம் காணலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் 
PHP - Repeating a string 'n' times
General Form:

str_repeat($string,integervalue);
Example:
str_repeat("AA",3);
Output : AAAAAA

இன்று மார்ச் 11 
2007-ஆம் ஆண்டு இதே நாளில் தென்
அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள
கயானா விண்வெளி ஏவுதளத்தில்
ஏரியன்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக
அது இன்சாட்-4B என்ற இந்திய செய்மதியையும்
ஸ்கைநெட்-5A என்ற  பிரித்தானியாவின்
துணைக்கோளையும் சுமந்து சென்றது.

9 comments:

  1. it's really true that Google is developing like anything.
    Useful and informative post,, Congrates

    ReplyDelete
  2. //கூகுள்-ன் வளர்ச்சியைப்பற்றி தினமும் ஒரு பதிவு இட்டுக்கொண்டே
    தான் இருக்க வேண்டும் போல//

    உண்மைதான்... கூகிள் இணையத்தை கலக்குகிறது... கூகிள் பற்றிய மற்றுமொரு அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி... உங்கள் வலைப்பதிவில் நிறைய தகவல்கள் உள்ளது மலைக்கவைக்கிறது... வாழ்த்துக்கள்..! தொடருங்கள்...!

    -
    DREAMER

    ReplyDelete
  3. விரைவில் வெளிவரும்......

    ReplyDelete
  4. can u tell me about this ? how can i check this. and also i need link for this.

    ReplyDelete
  5. கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு. இதில ஒரு முக்கியமான விசயத்த உணரனும். இதனால தனி மனித சுதந்திரம் ரொம்பவும் பாதிக்கும். யார் யாரு என்ன பன்றங்கானு ஈசியா எல்லாரும் பாக்கலாம். ஒவ்வொரு விஞ்ஞான வளர்ச்சியும் நல்லதுக்கும் பயன்படுது கெட்டதுக்கும் பயன்படுது. உலகம் எங்க போகுதோ தெரியல!!!!

    ReplyDelete
  6. notify me of follow-up comments via email

    ReplyDelete
  7. @ bilal
    உங்கள் கேள்வியை விரிவாக கேளுங்கள்.

    ReplyDelete

Post Top Ad