ஒரே இடத்தில் ஆயிரம் அறிவை வளர்க்கும் விளையாட்டுகள் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, March 10, 2010

ஒரே இடத்தில் ஆயிரம் அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விளையாட்டு
என்றால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஆனால் சில
விளையாட்டுகள் நம் அறிவை மழுங்கடிக்கின்றன சில விளையாட்டுகள்
நம் மூளையை சுறுசுறுப்பாக மாற்றுகிறது அந்த வகையில் இன்று
நாம் பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல் நம் அறிவையும்
மேம்படுத்தும் வண்ணம் ஆயிரம் விளையாட்டுகள் அத்தனையும்
ஒரே இடத்தில் எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.



ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரமும் பொன்னாச்சே அதே போல்
தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின்
அறிவை வளர்க்கும் வண்ணம் ஆயிரம் சிறப்பான விளையாட்டுகள்
இந்த தளத்தில் உள்ளது.

இணையதளமுகவரி : http://www.abcya.com

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் விரும்பும் விளையாட்டை
தேர்வு செய்யலாம். கணிதத்தில் அறிவு குறைவாக இருக்கிறதா
அப்படிஎன்றால் கணித அறிவை மேம்படுத்தும் விளையாட்டை
தேர்வு செய்யலாம், ஆங்கில அறிவு குறைவு என்றால் ஆங்கிலம்
சம்பந்தமான விளையாட்டை விளையாடலாம். இதில் நாம்
தேர்ந்தெடுக்கும் எந்த விளையாட்டுக்கும் ரெஸிஸ்ட்ரேசன் தேவை
இல்லை. ஒவ்வொரு விளையாட்டும் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு
உள்ளது. நாம் எந்த பகுதியை வேண்டுமானாலும் தேர்வு செய்து
விளையாடலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP -ல் String Length கண்டுபிடிக்க உதவும் நிரல்

strlen(stringname);

Eg:
$string="winmani";
strlen($string);


Output : 7

இன்று மார்ச் 10 
பெயர் : பெருஞ்சித்திரனார் ,
பிறந்த தேதி : மார்ச் 10, 1933

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருபதாம்
நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள்
குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர்.
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார்,
மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை
கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப்
பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக்
கொண்டவர். உங்களால் இந்திய தேசத்திற்கு பெருமை.

2 comments:

  1. Dear Bro,
    Very usefull information , thanks lot

    ReplyDelete
  2. நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post Top Ad