செய்திகளை இணையதளம் மற்றும் பிளாக்குகளில் அத்துமீறி
பரப்புபவர்கள், காப்பூரிமம் பெற்ற இணையதளத்தில் இருந்து
வெளியிடப்படும் தகவல்களை திருடி தங்கள் இனையப்பக்கத்தில்
வெளியீடுபவர்கள் என அனைவரையும் விரைந்து பிடிக்க
சைபர்கிரைம் புதியயுக்தியை கையாண்டுள்ளது.
தங்களுக்கு பிடித்த் பெயரில் பிளாக் வைத்து ஆபாசபடங்கள்,
செய்திகள்,மென்பொருள்,வீடியோக்கள்,பாடல்கள் என
அனைத்தையும் அனுமதியின்றி வெளியீட்டு வருகின்றனர்.
சோசியல் நெட்வொர்க்கான கூகுள் பிளாக்ஸ்பாட்,வேர்டுபிரஸ்
இன்னும் பல தளங்கள் மூலம் தான் இந்த தகவல்
அனைவருக்கும் பரிமாறப்படுகின்றன ஆனால் சமீபத்தில்
சீனாவில் கூகுள் தடை பாராளுமன்றத்திலும் கூகுள் பற்றிய
பேச்சு போன்ற காரணங்களுக்காகவும் இப்போது எங்கே இருந்து
ஒரு பிளாக் அப்டேட் செய்யப்படுகிறது அவர்களை பற்றிய
முழுதகவல்கள்களையும் சைபர்கிரைம் எங்களிடம் கேட்டால்
உடனே தருகிறோம் என்கின்றனர் சோசியல் நெட்வொர்க்
வைத்திருப்பவர்கள். கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஒருவர்
அவரது பல(6) பிளாக்குகளில் தமிழ் சினிமாவைப்பற்றியம்,
நடிகர் நடிகைகளைபற்றியும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
பற்றியும் தவறான தகவல்களை வெளியீட்டுவந்தார் அவர்
தன்னுடைய கம்ப்யூட்டரின் IP முகவரியை மாற்றியும்
பதிவுகளை இட்டு வந்தார்.போலி IP முகவரிகளை எளிதாக
கண்டுபிடித்து தரும் மென்பொருளின் துணைகொண்டு அவரை
சைபர்கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர் அவரது பிளாக்கும்
உடனடியாக முடக்கப்பட்டு விட்டது. உங்கள் இணையதள
தகவல்கள் அல்லது சில தவறான செய்திகளை பரப்பி வரும்
இணையதளங்கள் அல்லது பிளாக்குகளை பற்றி புகார் கூற
வேண்டுமனால் கீழ்கண்ட சைபர்கிரைம்-ன் தொலைபேசி
எண்ணிலோ அல்லது இமெயில் முகவரியிலோ தொடர்பு
கொள்ளலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தொலைபேசி எண் :+91 - 022 - 24691233
இமெயில் முகவரி : officer@cybercellmumbai.com
இணையதளத்தில் எதெல்லாம் குற்றம் என்பதை பற்றிய
விரிவான விளக்கங்களுக்கு இந்த முகவரியை சொடுக்கவும்
http://www.cyberlawsindia.net
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
Escape sequences
Literal Represents
\n New line
\t Horizontal tab
\b Backspace
\r Carriage return
இன்று பிப்ரவரி 19
பெயர் : உ.வே.சாமிநாதையர்,
பிறந்த தேதி : பிப்ரவரி 19, 1855
பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத்
தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்
குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்
உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.
Thanks for Sharing this gr8 news.
ReplyDeleteதமிழை விரும்பிக் கற்று, நிஜமான சேவை செய்த இவரை தமிழர்கள் மறந்து வருகின்றனர். யார் யாரோ தமிழ்க் காவலர்கள் ஆகிக் கொண்டு வருகிறார்கள். ஆயிரத்தி எண்ணூறுகளில் இவர் அறிமுகப் படுத்திய உரைநடை சுஜாதா, புதுமைப்பித்தன் இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்ட ஸ்டைல். அவரை நினைவில் வைத்திருப்பதற்கும், நினைவு படுத்தியதற்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
ReplyDeletei am new in this feild
ReplyDelete