புகைப்படம் மற்றும் வீடியோக்களை இலவசமாக டிவிட்டரில்
பதிவேற்றவும் பகிர்ந்துகொள்ளவும் ஒரு இணையதளம் வந்துள்ளது
அதைப்பற்றி தான் இந்த பதிவு. நாளுக்கு நாள் பெருகிவரும்
டிவிட்டரின் வாடிக்கையாளர்கள் அத்தனைக்கும் இதில் 140
வார்த்தைகளுக்குள் தான் நம் எண்ணத்தை பகிர்ந்துகொள்ள
வேண்டும் இப்படி இருக்க்கு இந்த டிவிட்டரில் நாம் புகைப்படங்களை
பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றால் ஏதாவது ஒரு இணையதளத்திற்கு
சென்று அப்லோட் செய்து பின் அந்த முகவரியை சுருக்கி தான் நாம்
டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளமுடியும் ஆனால் இப்போது புதிதாக ஒரு
இணையதளம் நம் நாம் டிவிட்டரில் புகைப்படம் அனுப்பவும்
வீடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் அதை உடனடியாக டிவிட்
செய்யும் வசதியுடன் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://www.yfrog.com
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அப்லோட் செய்யவேண்டிய படம்
அல்லது வீடியோவை Browse என்ற பட்டனை அழுத்தி தேர்வு
செய்துகொள்ளவும் அதன்பின் நீங்கள் டிவிட் செய்யவேண்டிய
வார்த்தையை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் டைப் செய்து "Post it"
என்ற பட்டனை அழுத்தி போஸ்ட் செய்யும் போது நம் டிவிட்டரின்
கணக்கின் usename மற்றும் password -ஐ கொடுத்து எளிதாக
டிவிட் செய்யலாம். டிவிட்டரில் இனி புகைப்படம் மற்றும் வீடியோ
அப்லோட் செய்ய வேண்டும் என்றால் இந்த இணையதளமே போதும்
அதோடு டிவிட்டர்க்கு கூட நாம் செல்லாமல் டிவிட் செய்யலாம்.
நாம் அப்லோட் செய்த புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு சுருக்கப்பட்ட
முகவரியையும்(Short url)சேர்த்தே டிவிட் செய்து அனுப்பப்பட்டிருக்கும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
ஜாவாவில் Forloop சற்றுவித்தியாசமாக..
for(;;)
for (int i = 0;true;)
for (System.out.println("Initializing");true;
System.out.println("Incrementing"))
for (int i = 0, j = 0; i < 5 && j < 5; i++)
int[] a = new int[5];
for (int x :a){}
இன்று பிப்ரவரி 2
பெயர் : திமீத்ரி மென்டெலீவ்,
பிறந்த தேதி : பிப்ரவரி 2, 1907
ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும்
ஆவார்.வேதியியல் தனிமங்களின் முதலாவது
ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவர்.
இவர் காலத்தில் கண்டுபிடிக்கப்படாத
தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர்
என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
அனைவரும் ட்விட்டர் ல் குறையாக நினைத்து கொண்டிருந்தது தங்கள் பதிவின் மூலம் மிக நிவாரணம் கிடைதிருகிறது.
ReplyDeleteநன்றி.
இளமுருகன்
நைஜீரியா.
I hope to get friends at this forum
ReplyDelete