வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்லி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, January 22, 2010

வீடியோ ஆடியோ டாக்குமெண்ட் பதிவேற்ற நீளமான இணையதள முகவரியை சுருக்க போஸ்ட்லி

நம் ஆடியோ வீடியோ தகவல்களை இலவசமாக பதிவேற்ற ஒரு
இணையதளம் அந்த இணையதள முகவரியை சுருக்க ஒரு
இணையதளம் என்று தேட வேண்டியதில்லை அத்தனையையும் ஒரே
இடத்தில் நாம் அப்லோட் செய்யலாம்.அதோடு அப்லோட் செய்யும்
டாக்குமெண்டுக்கு சிறிய அளவிளான இணையதள முகவரியும்
பெறலாம் அத்தோடு இதனை டிவிட்டும் செய்யலாம் இத்தனையும் நாம்
ஒரே இணையதளத்தில் எப்படி என்று பார்ப்போம்.

http://post.ly இந்த இணையதளத்திற்கு செல்லவும் இதில்
”அப்லோட் பைல்ஸ் ” என்பதை அழுத்தி நாம் பதிவேற்ற வேண்டிய
ஆடியோ , வீடியோ அல்லது டாக்குமெண்ட் கோப்பு-ஐ
தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்ததும் அதுவே அப்லோட் ஆக
ஆரம்பிக்கும். "ADD Text"  என்பதில் நாம் பதிவேற்றியகோப்புக்கு
புரியும்படி ஏதாவது பெயரை சேர்த்துக்கொள்ளலாம். நாம் அப்லோட்
செய்த கோப்பு-ஐ உடனடியாக டிவிட் செய்து கொள்ளும் வசதியும்
உள்ளது.இதே போன்று இணையதளமுகவரியை சுருக்க பல
இணையதளங்கள் இருந்தாலும் மற்றவற்றில் எல்லாம் வேறு
எங்காவது நாம் கோப்பை சேமித்துவிட்டு அந்த முகவரியை தான்
சுருக்க முடியும். ஆனால் போஸ்ட்டிலியில் நாம் இலவசமாக நம்
கோப்பு-ஐ தரவேற்றுவதுடன் உடனடியாக சுருக்கப்பட்ட
முகவரியையும் (Short URL) பெற்றுவிடலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்:
பிரவுஷரை கண்டுபிடிக்க உதவும் ஜாவா நிரல்
//A. Target Safari
if( $.browser.safari ) $("#menu li a").css("padding",
"1em 1.2em" );
//B. Target anything above IE6
if ($.browser.msie && $.browser.version > 6 ) $("#menu
li a").css("padding", "1em 1.8em" );
//C. Target IE6 and below
if ($.browser.msie && $.browser.version <= 6 ) $("#menu
li a").css("padding", "1em 1.8em" );
//D. Target Firefox 2 and above
if ($.browser.mozilla && $.browser.version >= "1.8" )
$("#menu li a").css("padding", "1em 1.8em" );

எந்த பிரவுஷர் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை
எளிதாக கண்டுபிடிக்க உதவும் நிரல்.

இன்று ஜனவரி 23  
பெயர் : சுபாஷ் சந்திர போஸ்,
பிறந்ததேதி : ஜனவரி 23, 1897
நேதாஜி என்று இந்திய மக்களால்
மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ்
சந்திர போஸ்.நூற்றுக்கணக்கான இந்தியர்களை
ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை
உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு
எதிராக தாக்குதல் நடத்தியவர். இவர் மரணம் இன்றளவும்
ஆங்கிலேயர்க்கு புரியாதபுதிராகவே உள்ளது.இந்தியமக்கள்
அனைவரும் உங்களுக்காக தலை நிமிர்ந்து வணங்குகிறோம்.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

1 comment:

Post Top Ad