பேஸ்புக் சேமிக்கும் புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தியுள்ளது - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, January 20, 2010

பேஸ்புக் சேமிக்கும் புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தியுள்ளது

பல நாள் கோரிக்கை இறுதியாக இப்போது தான் பேஸ்புக்
தனது நெட்வொர்க்கில் சேமிக்கும் படத்தின் உயரம் மற்றும்
அகலத்தை அதிகரித்துள்ளது. அதிகமான பயனாளர்களை கொண்டு
உலகத்தில் வலம் வரும் பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே
புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தபோவதாக அறிவித்துவந்தது


இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதாவது படத்தின்
அகலம் 180 உயரம் 540 (180x540) என்று அளவை தான் இதுவரை
பேஸ்புக் -ல் நாம் பயன்படுத்தி வந்தோம் ஆனால் இனி அகலம் 200
மற்றும் உயரம் 600 என்று படத்தின் உயரம் மற்றும் அகலத்தை
அதிகப்படுத்தியுள்ளது. பிளிக்கர் போன்ற இணையதளங்களில் இருந்து
நாம் அப்லோட் செய்யும் புகைப்படத்தின் அளவும் இனி இந்த அளவாக
மாற்றப்பட்டுவிடும்.இதற்காக பேஸ்புக்-ல் கூடுதலாக சேமிக்கும்
இடத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
கூகுள் அறிமுகப்படுத்தும் பிரஷ் ஜாவா நிரல்
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/
jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript">
</script>

இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் ஜாவா பயன்படுத்து
பவருக்கும் பயனுள்ள் நிரல்.

இன்று ஜனவரி 21 
பெயர் : விளாடிமிர் லெனின்,
மறைந்த தேதி : ஜனவரி 21, 1924
ரஷ்யப் புரட்சியாளர்,போல்செவிக் கட்சியின்
தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல்
அதிபரும் ஆவார்.லெனின் பெத்ரோகிராடில்
ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே
நடத்தினார். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன.
என்றும் மக்களின் மகத்தான தலைவர் லெனின்.

4 comments:

  1. good..
    useful..
    what is RSS? Please explain.
    In which way rhe above java code is useful for web designing?
    Pl clear me!!

    ReplyDelete
  2. Rss என்பது Really Simple Syndication தமிழில்
    சொல்வதென்றால் செய்திதொகுப்பு என்று கூறலாம். ஒரு
    இணையதளத்திலிருந்து வெளிவரும் அத்தனை
    பதிவுகளையும் ஒன்றுவிடாமல் ஒரே பக்கத்தில்
    அத்தனை செய்திகளையும் )படிக்க இது உதவுகிறது.
    இதைப்பற்றி விரிவாக ஒரு பதிவு விரைவில் எழுதுகிறோம்.
    மேலே உள்ள ஜாவா நிரல்,நீங்கள் எழுதும் ஜாவா நிரல்
    அனைத்து வெப்ப்பிரவுசர்களிலும் சரியாக வெளிவர உதவும்.

    ReplyDelete
  3. தங்கள் வலைப்பூ பல பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.

    // மேலே உள்ள ஜாவா நிரல்,நீங்கள் எழுதும் ஜாவா நிரல்
    அனைத்து வெப்ப்பிரவுசர்களிலும் சரியாக வெளிவர உதவும்.

    தேடிப் பார்த்தேன் ஜாவா நிரல் எங்கே உள்ளது. jQuery என்பது ஜாவாஸ்கிரிப்ட் துணைநிரல்தானே(library). http://api.jquery.com/category/ajax/

    ReplyDelete
  4. நண்பருக்கு இது கூகுள் பயன்படுத்தும் மேம்மப்டுத்தப்பட்ட ஜாவா நிரல்...
    http://ajax.googleapis.com/ajax/libs/
    jquery/1.3.2/jquery.min.js

    மிக்க நன்றி.

    ReplyDelete

Post Top Ad