கணினி லேப்டாப் வடிவமைப்பில் முன்னால் நிற்கும் ஆப்பிள்
நிறுவனத்தை பற்றிய பதிவு.
கடந்த சில நாட்களாக ஒரு செய்தி ஆப்பிள் நிறுவனத்திலிருந்து
புதிய வடிவமைப்பில் பல தொழில்நுட்ப வசதிகளுடன் ஒரு லேப்டாப்
வெளிவருவதாக தகவல் இது வதந்தியாக கூட இருக்கலாம் என்ற
நிலையில் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக
ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது அதாவது வரும் ஜனவரி 27ம்
தேதி கிரியேட்டிவ் ஆன ஒன்று வெளிவர போகிறது கூடவே ஒரு
ஆர்ட் படம் இணைக்கப்பட்டுள்ளது.ஒவியம் வரைபவர்களுக்கு
என்று சிறப்பாக ஏதாவது மென்பொருள் வெளியிட போகிறார்களா?
அல்லது இணையதள வடிவமைப்பாளர்களுக்கான ஏதாவது
மென்பொருள் வரப்போகின்றதா ? அல்லது பெயிண்ட் பிரஷ் ஏதும்
தேவையில்லை கையில் ஒரு குச்சி கொடுத்து எங்கள் மானிட்டரை
நீங்கள் வரைபலகையாக பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வண்ணத்தை
தேர்ந்தெடுத்து படம் வரையுங்கள் என்றும் சொன்னாலும்
ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.கிரியேட்டிவ் என்றாலே
புதுமைதான், என்ன புதுமையை ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்
போகின்றது என்ற ஆவல் அனைத்து கம்யூட்டர் வல்லுனர்களுக்கும்
பயன்படுத்துபவர்களுக்கும் உள்ளது. என்ன என்பதை தெரிந்து கொள்ள
நாம் வரும் 27 -ம் தேதி வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
இன்று ஜனவரி 19
பெயர் : ஓஷோ ,
மறைந்த தேதி : ஜனவரி 19, 1990
இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள்
ஒருவர்.சிறந்த பேச்சாளர்.ஆங்கிலத்திலும்
இந்தியிலும் பல சொற்பொழிவு நிகழ்த்தி
உள்ளார். புத்தர்,கிருஷ்ணர்,குரு நானக்,
இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற ஞானிகளிடம்
மிகுந்த ஈடுபாடு உள்ளவர். நேர்மை துணிவு மிகுந்தவர்.
அன்பானவர். தியானத்தில் பல புதுவழியை கண்டறிந்தவர்.
இன்னும் 8 நாட்கள்
ReplyDelete