யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, December 8, 2009

யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற

இன்றைய காலகட்டத்தில் யூடியுப் ஒரு அத்தியாவசிய தேவையாகவே

மாறிவிட்டது. இத்தகைய யூடியுப் வீடியோவில் நாம் பார்க்கும் பல

வீடியோவின் சிலபகுதிகள் தேவை இல்லாமல் இருக்கும்.

தேவையான பகுதிகளை மட்டும் பார்க்க வேண்டும் என்றாலும்

முழுவதும் பார்த்துதான் ஆக வேண்டும். இந்த குறையை நீக்க

நீங்கள் பார்க்கும் வீடியோவில் தெரிவு செய்த சில பகுதிகளை

மட்டும் சேர்த்து ஒரு வீடியோவாக மாற்றலாம். மாற்றியவுடன்

ஒரு வீடியோ லிங் ( Link URL ) கொடுக்கப்படும்.அந்த வீடியோ

லிங்கை உங்கள் நண்பருக்கு கொடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த

பகுதிமட்டும் தான் இருக்கும். எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.முதலில் உங்களுக்கு பிடித்த யூடியுப் முகவரியை ( Youtube url )

காப்பி செய்துகொள்ளவும். www.tubechop.com இந்த இணையதளத்திற்கு

செல்லவும். நீங்கள் காப்பி செய்த யூடியுப் முகவரியை படம் 1 -ல்

காட்டியபடி தேடும் இடத்தில் கொடுக்கவும். வரும் முடிவை சுட்டி

உள்ளே செல்லவும். உதாரனத்திற்காக நாம் இளையராஜா வீடியோ

ஒன்றை சுட்டி உள்ளே செல்கிறோம். படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
இடதுபக்கத்தில் உள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் இருந்து

தொடங்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.வலதுபக்கத்தில்

உள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் வீடியோ நிறைவு பெறவேண்டும்

என்பதையும் தேர்ந்தெடுக்கவும். அல்லது தொடங்கி முடியும்

நேரத்தை மேலே இருக்கும் கட்டத்திற்குள்ளும் கொடுக்கலாம்.

"Chop it " என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.அடுத்து தோன்றும்

பக்கத்தில் நீங்கள் தேர்வுசெய்த இடம் முழுவீடியோவாக

மாற்றப்பட்ட்டு அதற்குறிய முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும்.

நாம் கொடுத்த யூடியுப் முகவ்ரி


மாற்றப்பட்ட வீடியோ முகவரி7 comments:

 1. முத்து செந்தில் குமார்December 23, 2009 at 9:00 PM

  you can download the Youtube videos to your PC using this following site.
  www.get2pc.com

  ReplyDelete
 2. சில நேரங்களில் இது போன்ற இணையதளங்களில் இருந்து தரவிரக்கும்போது வைரஸ் கூட வரலாம்.அதுமட்டுமின்றி தாங்கள் தெரியப்படுத்திய இணையதளத்தில் செக்கியூரிட்டி சர்டிபிக்கெட்டும் இல்லை என்பது குறிப்பிடத்க்கது. தரவிரக்கினாலும்
  ஆண்டிவைரஸ் துனையுடன் ஒரு முறை செக் செய்வது நல்லது.

  ReplyDelete
 3. செய்து பார்த்துவிட்டேன் வேலைசெய்கிறது....நன்றி.

  ReplyDelete
 4. பரிசேதனைசெய்து பார்த்துவிடேன் வேலைசெய்கிறது....நன்றி.

  ReplyDelete
 5. @ tharsigan
  மிக்க நன்றி

  ReplyDelete
 6. @ tharsigan
  மிக்க நன்றி.

  ReplyDelete

Post Top Ad