நம் இணையதளத்திற்கு வருவோரை கண்களால் மட்டும்
அழகு படுத்தினால் போதுமா ? காதினால் இனிமையான
ஒலி வந்து அவர்களின் காதுகளையும் வருட வேண்டாமா?
என்னிடம் எந்த மென்பொருளும் இல்லை என்கிறீர்களா ?
பராவாயில்லை. நம் இணையதளத்திற்கு வருவோரை
நம் குரலால் வரவேற்கலாம் , நல்ல இசையால்
வரவேற்கலாம்.ஆங்கில எழுத்துக்களை கொடுத்து அதை
ஒலியாக மாற்றியும் வரவேற்கலாம்.ஒரு பைசா செலவில்லாமல்
எந்த விளம்பரமும் இல்லாமல் இது சாத்தியமா என்றால்
சாத்தியம் தான். எப்படி இதை உருவாக்குவது என்று இனி
பார்ப்போம்.
www.audiopal.com இந்த இணையதளத்திற்கு செல்லவும்.
"GET YOURS IT'S FREE " என்ற பட்டனை அழுத்தவும்.
போன் மூலம் உங்கள் குரலை பதிவு செய்யலாம்.
அல்லது வார்த்தையை ஒலியாகமாற்றி சொல்லவைக்கலாம்,
மைக்ரோபோன் மூலம் பேசியும் , விரும்பிய இசையை
அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது.

இப்போது நாம் படம் 2-ல் காட்டியபடி " Text to speech"
என்பதை தேர்வு செய்துள்ளோம். உள்தோன்றும் கட்டத்தில்
நாம் விரும்பிய வார்த்தையை டைப் செய்யவும்.எந்த நாட்டின்
மொழி என்பதயும் ஆண் அல்லது பெண் குரல் யார் சொல்ல
வேண்டும் என்பதை தேர்வு செய்து “Say It " என்ற பட்டனை அழுத்தவும்.
Preview-ல் பிளே பட்டனை அழுத்தி சரிபார்த்துக்கொள்ளவும்.
அடுத்ததாக உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து “ Get it "
என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த நிமிடம் உங்கள் இமெயில்-ல்
ஒரு லிங்க் ( Link Url) தொடுப்பு கொடுக்கபட்டிருக்கும். அதை க்ளிக்
செய்யவும்.

பட்ம் 3-ல் காட்டியபடி தோன்றும். Publish Destinations
என்ற மெனு இந்த ஒலியை உங்கள் Facebook , Myspace ,
Hi5, Live, Friendster போன்றவற்றில் இணைக்கலாம்
“ Play on load " என்ற பட்டனை தேர்வுசெய்தால் நம் பக்கம்
லோட் ஆகி முடிந்ததும் தானாகவே Play ஆகும்.
Copy code என்பதை க்ளிக் செய்து உங்கள் இணையத்தில் Paste
செய்யவும்.

Other என்ற மெனுவை தேர்வுசெய்து உங்களின்
சொந்த இணையதளத்திலும் ஒலியை கேட்க வைக்கலாம்.
உங்கள் இணையதளத்தில் இதே மாதிரி குட்டி ஒலிப்பான்
வந்துவிடும்.

உதாரணமாக நாம் உருவாக்கியதை பார்க்க கீழ் உள்ள முகவரியை சொடுக்கவும்.
தென்காசியாரை போல, தினமும் ஒரு பயனுள்ள நல்ல பதிவுகளை தந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி அய்யா.
ReplyDeleteஅட
ReplyDeleteநன்றாக இருக்கிறதே..
கோடை(code) எந்த இடத்தில் பேஸ்ட் செய்ய வேண்டும்?
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
உங்களுக்கு இணையதளத்தில் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில் பேஸ்ட் செய்யலாம். வேர்டுபிரஸ். காம் -ல் மேம்படுத்தப்பட்ட அக்கவுண்ட் இருந்தால் மட்டுமே
ReplyDeleteபயன்படுத்த முடியும். ஆனால் ப்லாக்ஸ்பாட்-ல் பயன்படுத்தலாம்.
மேம்படுத்தப்பட்ட அக்கவுண்ட் என்றால் என்ன நண்பரே
ReplyDelete@ stalin
ReplyDeleteகாசு கொடுத்து வாங்கும் அக்கவுண்ட்-க்கு பெயர் தான் மேம்படுத்தப்பட்ட அக்கவுண்ட்.
நன்றி